குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
24
மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு தங்கம் விலையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டது.
34
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.45,440க்கும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.
44
அதேபோல வெள்ளி விலை இன்று ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 79,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய (மே 21) நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை பொறுத்தவரை நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது.