யு.ஏ.ஐ.யை தளமாகக் கொண்ட லுலு குரூப் (LuLu Group) இந்தியாவில் மிக வேகமாக விரிவடைந்துள்ளது. கொச்சி, லக்னோ, ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள லுலு மால் (LuLu Mall)-கள், ஒரு ஹைப்பர் மார்க்கெட்டும், பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோருமான அனுபவத்தையும் ஒரே கூரையின் கீழ் தருகின்றன. குறிப்பாக கொச்சி மால் 25 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு காய்கறிகள், தினசரி தேவைகள், பிராண்டட் உடைகள், எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்ஸ் என 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன.