Gold Rate Today (August 25): திங்கள் கிழமை காலையிலேயே வந்த நல்ல செய்தி.! தங்கம் விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.!

Published : Aug 25, 2025, 09:52 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9305க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74,440க்கும் விற்பனையாகிறது சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் தங்கம் விலை குறைந்துள்ளது, வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது.

PREV
13
தங்கம் விலை உயர்வு.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். இருந்த போதிலும் வெள்ளி விலை 1 ரூபாய் அதிகரித்துள்ளது.

23
இன்றைய விலையை தெரிஞ்சுக்கோங்க.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.9305க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 80 ரூபாய் குறைந்து 74,440 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 131 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

33
ஆவணியில் குறையுமாம்.!

அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories