LPG Aadhaar Link: அக்டோபர் 1-க்குள் இதை செய்யலைனா கேஸ் மானியம் கட்!

Published : Sep 20, 2026, 03:29 PM IST

LPG Aadhaar Link: வீட்டு உபயோக LPG சிலிண்டர் பயன்படுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான மாற்றம் அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

PREV
14
கேஸ் மானியம் குறித்து அப்டேட்

மத்திய பெட்ரோலிய அமைச்சகம், அக்டோபர் 1ஆம் தேதிக்குள் வீட்டு உபயோக எல்பிஜி (LPG) வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை (BAA) கட்டாயம் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதுவரை 89 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதை முடித்துவிட்டனர். ஆதார் சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கு கேஸ் மானியம் கிடைக்காது என்றாலும், வழக்கம் போல சிலிண்டர் கிடைக்கும் என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் சிலிண்டர் டெலிவரி செய்யும் போதோ, கேஸ் ஏஜென்சி அலுவலகத்திலோ அல்லது எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் ஆப் மூலமாகவோ இதை செய்து கொள்ளலாம். இதற்கான காலக்கெடு ஏற்கனவே நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

24
ஆன்லைனில் செய்யும் முறை

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) இணையதளத்தில், நீங்களே ஆன்லைனில் இ-கேஒய்சி (e-KYC) செய்வதற்கான வீடியோ விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் 'IndianOil ONE' ஆப் மூலமாகவும், பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 'HelloBPCL' மூலமாகவும், ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் 'HP PAY' மூலமாகவும் இ-கேஒய்சியை சுலபமாக முடித்துக்கொள்ளலாம்.

34
ஆதார் சரிபார்ப்பை முடிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை செய்ய விரும்பாத அல்லது செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ந்து கேஸ் சிலிண்டர் கிடைக்கும். ஆனால், அவர்கள் இணையதளம், மொபைல் ஆப், வாட்ஸ்அப் சாட்போட் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் டிஜிட்டல் தளங்கள் மூலமாக தங்களின் முடிவை பதிவு செய்ய வேண்டும். இந்த வாடிக்கையாளர்களுக்கு, இருப்புக்கு ஏற்ப 5 கிலோ அல்லது 10 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் மானியம் இல்லாமல் சந்தை விலையில் வழங்கப்படும்.

44
ஆதார் சரிபார்ப்பு எதற்காக?

தகுதியான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் போய் சேருவதை உறுதி செய்யவே இந்த ஆதார் சரிபார்ப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. போலி இணைப்புகளை கண்டுபிடிக்கவும், மானிய விலையில் கிடைக்கும் வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியாக முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கவும் இது உதவும். உண்மையான வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் கிடைக்காமல் செய்வது இதன் நோக்கமல்ல என்றும், சரிபார்ப்பை முடிக்க பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எல்பிஜி சேவைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 2333 555 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories