LPG Gas Price: 4 மாதங்களுக்கு பிறகு உயர்ந்தது கேஸ் சிலிண்டர் விலை! எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

First Published | Aug 1, 2024, 7:01 AM IST

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்து ரூ.1,817-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Commercial Cylinders

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. 

Gas Cylinder Price

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 4 மாதங்களாக குறைந்து வந்தது. 

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

Tap to resize

Commercial LPG Cylinder Rate

இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.  19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.7.50 காசுகள் உயர்ந்து ரூ.1,817க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

Domestic Use Cylinder

அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது.

Latest Videos

click me!