ராக்கெட் வேகத்தில் உயரப் போகும் தங்கத்தின் விலை... இனி விலை குறைய வாய்ப்பு கிம்மிதான்!

Published : Aug 01, 2024, 12:22 AM IST

சமீபத்திய மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை குறைத்ததால், தங்கத்தின் விலை கிடுகிடுவென வீழ்ச்சி கண்டது. ஆனால், இந்தப் போக்கு ரொம்ப நாளுக்கு நீடிக்கப்போவதில்லை.

PREV
15
ராக்கெட் வேகத்தில் உயரப் போகும் தங்கத்தின் விலை... இனி விலை குறைய வாய்ப்பு கிம்மிதான்!

இந்தியா உலக அளவில் தங்கத்தை விரும்பும் நாடுகளில் இரண்டாவதாக உள்ளது. சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை கிடுகிடுவென சரிந்தது. 10 நாட்களில் சவரனுக்கு ரூ.4,000 வரை விலை குறைந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம் என வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

25

தங்கம் விலை குறைவு ரொம்ப நாளுக்கு நீடிக்கப்போவதில்லை என்றும் வல்லுநர்கள் கணிக்கிறார்கள். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்த முடிவு வெளியாகும் எனத் தெரிகிறது.  இதனால் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

35

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும் செப்டம்பர் மாதத்தை ஒட்டி வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இச்சூழலில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

45

ஆடி மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் திருமண சீசன் ஆரம்பித்துவிடும் என்பதால், அப்போது மறுபடியும் விலை உயரும். சுபகாரியங்களுக்காக தங்கம் வாங்குவது அதிகரிப்பதால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். அதன் எதிரொலியாக விலையும் உயரும் என்று சொல்கிறார்கள்.

55

இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6,420 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.51,320 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,875 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலைஒரு கிராம் ரூ.91 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.91,000 ஆக உள்ளது.

click me!

Recommended Stories