நாட்டில் அடுத்த 20-25 ஆண்டுகளுக்குள் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரிக்கும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் மத்திய அரசும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய திட்டங்களை வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
படிக்கும் காலம் வரை பெற்றோர் அரவணைப்பில் வாழும் பிள்ளைகள், நாலு காசு சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் பெற்றோரை பாரமாக எண்ணத்துவங்கிவிடுகின்றனர். பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முறையாக கவனித்துக்கொள்வதில்லை. அவர்கள் ஆதவற்றோர்களாக வீதிகளிலும், முதியோர் மையங்களிலும் விடப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஆதரவாக மத்திய அரசு AVYAY - Atal Vayo Abhyuday Yojana திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.