தங்கத்துக்கு அடுத்து வெள்ளியில் முதலீடு செய்யலாமா? கைகொடுக்குமா? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த அட்வைஸ்!

First Published | Jul 31, 2024, 12:25 PM IST

வெள்ளியின் விலை ஜூலை தொடக்கத்தில் அதன் பின்னடைவு சந்தித்த நிலையில் கடந்த வாரம் நேர்மறையாக மாறியது, கிட்டத்தட்ட 7.30% அதிகரித்துள்ளது.

Anand Srinivasan on Silver Investment

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது என்றே சொல்லலாம்.

Anand Srinivasan

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிரடி தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி குறைப்பை அறிவித்தார். இதனால் ரூ.4000 வரை தங்கம் விலை சரிந்தது. வெள்ளி விலையும் கொஞ்சம் ஏற்றம், இறக்கத்தை கண்டு வருகிறது.

Latest Videos


Silver Investment

அதுமட்டுமின்றி இஸ்ரேல் லெபனான் தலைநகர் பெய்ரட்டில் நடத்திய வான் வழி தாக்குதலும், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது மூலம் உலக நாடுகளிடையே பெரும் பிரச்சினையாக மாறி இருக்கிறது. இதன் தாக்கம் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றில் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

Investing

இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தங்கம் விலையும், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்தது. இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு ஆனது மக்களிடையே அவற்றின் முதலீட்டின் மீது கவனத்தை திருப்பியுள்ளது.எனவே தங்கத்தின் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது உகந்த நேரம் இது என்றும், வெள்ளி மீதும் முதலீடு செய்யலாம் என்று பச்சைக்கொடி காட்டுகிறார்கள். பொருளாதார நிபுணர்கள்.

Gold

வெள்ளியின் குறைந்த விலைப் புள்ளி புதிய முதலீட்டாளர்கள் அல்லது குறைந்த மூலதனம் உள்ளவர்கள் முதலீடு குறித்த போர்ட்ஃபோலியோவை உருவாக்கத் தொடங்குவதற்கு அணுகக்கூடியதாக ஆக்குகிறது. மேலும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சூரிய ஆற்றல் போன்ற தொழில்களில் வெள்ளியின் விரிவான பயன்பாடு அதன் தேவை மற்றும் வளர்ச்சிக்கான சாத்தியத்திற்கு பங்களிக்கிறது.

Gold Price

வெள்ளியின் அதிக ஏற்ற இறக்கம், குறிப்பாக உலோக விலைகள் உயரும் அல்லது தொழில்துறையின் தேவை அதிகரிக்கும் காலங்களில், அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும். இதுகுறித்து பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “தங்கத்தின் விலை குறைந்த நிலையில் பொதுமக்கள் வாங்க ஆரம்பித்துள்ளனர். தற்போது தங்க விலையானது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Silver Saving

தங்க பத்திரத்தை வாங்கியவர்களுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தங்கத்தை கையில் வைத்திருப்பது நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். அதேபோல வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளியை சேமிப்பாக பார்க்க முடியாது. அது ஏற்றம், இறக்கங்களை கொண்டுள்ளது. தங்கம் சிறந்த சேமிப்பாக இருக்க முடியும். வெள்ளி சேமிப்பாக இருக்காது. எனவே தங்கம் நல்ல முதலீடாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

click me!