EPFO கணக்கு இருந்தால் போதும்! ரூ.50,000 நேரடியா உங்க அக்கவுண்ட்லயே டெபாசிட் ஆகும்!

First Published | Jul 31, 2024, 7:59 PM IST

EPFO கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் ரூ.50,000 லாயல்டி பணப்பலனை நேரடியாகப் பெறலாம்.

EPFO loyalty bonus

இந்தியாவில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளைப் நிர்வகிக்கும் EPFO. பணியாளர்கள் ஓய்வுக்குப் பின் நிலையான வருமானம் பெறுவதற்கான திட்டங்களை இந்த நிறுவனம் வழங்குகிறது.

EPFO loyalty cum life benefits

EPFO கணக்கு வைத்துள்ள தொழிலாளர்கள் பெறக்கூடிய நன்மைகளில் முக்கியமானது லாயல்டி பலன். இதன்படி, ரூ.50,000 வரை பணத்தைப் பெற முடியும்.

Latest Videos


EPF loyalty benefits

பணிபுரியும் இடத்தில் மாற்றம் ஏற்படும்போது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்குகளில் பங்களிப்பு வரவு வைக்கப்படும் வகையில் திருத்தம் செய்துகொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி, தொடர்ந்து 20 ஆண்டுகள் EPF கணக்கில் வரவு வைக்கப்பட்டால், லாயல்டி பலன்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

EPFO benefits

மத்திய அரசின் நேடிடி வரிகள் வாரியம் இந்தத் திட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டு பங்களிப்புக்குப் பிறகு EPF கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.50,000 கூடுதலாக பணப் பலனை பெறலாம்.

EPFO account deposits

தொழிலாளரின் அடிப்படை சம்பளம் ரூ.5000 வரை என்றால் ரூ.30,000 வரை லாயல்டி பலன் கிடைக்கும். ரூ.5001 – ரூ.10,000 வரை அடிப்படை சம்பளம் பெறுபவர்கள் ரூ.40,000 வரையும், ரூ.10,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் ஈட்டுபவர்கள் ரூ.50,000 வரையும் பெற்றுக்கொள்ள முடியும்.

employee provident fund

இந்தப் பணப் பலனை பெறுவதற்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். EPFO உறுப்பினராக உள்ள ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம் மாறும்போதெல்லாம் புதிய நிறுவனத்திடம் உங்கள் EPFO கணக்கு விவரங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் 20 வருடங்கள் கழித்து ரூ.50,000 வரை உங்களுக்குக் கிடைத்துவிடும்.

click me!