சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

Published : Mar 10, 2026, 08:44 PM IST

IPL 2026: சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

PREV
14
சிலிண்டர்கள் தட்டுப்பாடு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக ரீதியான கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. இதேபோல் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்வதிலும் சிக்கல் உள்ளது.

24
ஐபிஎல் போட்டிகள் நடத்துவதில் சிக்கல்

இந்த நிலையில், சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் என்பது வெறும் கிரிக்கெட் மட்டுமல்ல, அது வீரர்களின் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை போன்ற ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ள நகரங்களில் பல ஹோட்டல்கள் கேஸ் தட்டுப்பாட்டால் இயங்க முடியாத நிலையில் உள்ளன. சில ஹோட்டல்கள் ஏற்கனவே செயல்படும் நேரத்தையும் குறைத்துள்ளன.

34
ஐபிஎல் தலைவர் சொல்வது என்ன?

இதே நிலை தொடர்ந்தால் வீரர்களை தங்க வைக்க முடியாது. இது தொடர்பாக பேசிய ஐபிஎல் தலைவர் அருண் துமால், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். "இது தொடர்ந்து மாறிவரும் சூழல் என்பதால் இப்போது எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வீரர்கள் எப்படி வருவார்கள்?

மேலும் போர் காரணமாக வான்வழிப் போக்குவரத்துப் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு வீரர்களும் இந்தியா வருவதில் சிக்கல் உள்ளது. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பையில் பங்கேற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இந்தியாவுக்கு வந்து திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

44
ஐபிஎல் தொடரின் முதல் 20 நாட்களுக்கான அட்டவணை

இதற்கிடையே 2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 நாட்களுக்கான போட்டி அட்டவணையை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியிட இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சைகியா, "சில மாநிலங்களில் தேர்தல் தேதிகளைக் கருத்தில் கொண்டு, ஐபிஎல் தொடரின் முதல் 20 நாட்களுக்கான அட்டவணையை 2 அல்லது 3 நாட்களில் வெளியிடுவோம். மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பின்னர் அறிவிப்போம்" என்றார்.

ஐபிஎல் எப்போது தொடங்கும்?

அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், ஐபிஎல் போட்டி அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது. ஐபிஎல் 2026 சீசன் மார்ச் 28 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories