சேமிப்பும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் வேண்டும் என்றால், எல்ஐசி திட்டங்கள் இன்னும் பலரின் முதல் தேர்வாகவே உள்ளன. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) தனது நம்பகத்தன்மை மற்றும் நீண்டகால பலன்களுக்காக பிரபலமானது. 2025-ல், எல்ஐசி சில புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன், ஏற்கனவே உள்ள பிரபல திட்டங்களையும் மேம்படுத்தியுள்ளது. இவை முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பையும், நல்ல வருமான வாய்ப்பையும் சமநிலையாக வழங்குகின்றன.
உயர் பாதுகாப்பு தேடுபவர்களுக்கு ‘எல்ஐசி இன்சூரன்ஸ் கவர் (பிமா கவாச் - Bima Kavach)’ 2025 இறுதியில் அறிமுகமான இந்த டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம், அதிக காப்பீட்டு தொகை விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்றது. இதில் ரூ.2 கோடி அல்லது அதற்கு மேல் வரை சம் அஷ்யூர்டு தேர்வு செய்யலாம். மேலும், 100 வயது வரை காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடும்பத்தின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு வலுவான தேர்வாக கருதப்படுகிறது.
ஓய்வுக்கால வருமானத்திற்கான சிறந்த திட்டம் நியூ ஜீவன் சாந்தி (New Jeevan Shanti) ஆகும். இந்த திட்டம் ஓய்வுக்கால பென்ஷன் தேவைக்காக உள்ளது. ஒரே முறை முதலீடு (Lump Sum) செய்தால், வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற முடியும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1.5 லட்சம். 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்திற்குப் பிறகு, மாதந்தோறும் பென்ஷன் தொடங்கும். முதலீட்டு தொகை அதிகரித்தால், பென்ஷன் தொகையும் அதிகரிக்கும்.