பெண்களுக்கு LIC கொடுக்கும் ரூ.2 லட்சம்! பயிற்சி! வேலைவாய்ப்பு! வருமானம்!

Published : Jun 11, 2025, 09:55 AM IST

எல்.ஐ.சி பீமா சகி யோஜனா திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்கள் காப்பீட்டு முகவர்களாக பயிற்சி பெற்று, வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். பயிற்சி காலத்தில் மாத உதவித்தொகை மற்றும் கமிஷன் மூலம் நிதி ஆதரவு கிடைக்கும்.

PREV
110
பெண்களுக்கு LIC தரும் தன்நம்பிக்கை

மத்திய மாநில அரசுகள் பெண்கள் அதிகாரமூட்டலுக்காக தொடர்ந்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேற அரசு பல உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவின் நம்பகமான காப்பீட்டு நிறுவனமான LIC (Life Insurance Corporation of India), கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு நிதியியல் சுதந்திரம் வழங்கும் "பீமா சகி யோஜனா" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. எல்.ஐ.சி பீமா சகி யோஜனா (LIC Bima Sakhi Yojana) என்பது பெண்களை, குறிப்பாக கிராமப்புறப் பெண்களை, நிதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் காப்பீட்டு முகவர்களாக பயிற்சி பெற்று, வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, காப்பீட்டுத் துறையில் அவர்களது பங்களிப்பை அதிகரிக்க உதவுகிறது.

210
பீமா சகி யோஜனா என்றால் என்ன?

இந்த திட்டம் 2024 டிசம்பர் 9ஆம் தேதி ஹரியானாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இதில், கிராமப்புற பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் காப்பீட்டு முகவர் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்திலேயே அவர்கள் மாதாந்திர உதவித் தொகையும், கமிஷனும் பெற்று நிதி ஆதரவு பெறலாம்.

310
பயிற்சி காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி

பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் மூன்று ஆண்டுகளில், தகுந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேரும் மகளீருக்கு முதல் ஆண்டில் மதாம் ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் ஆண்டில் மாதாமாதம் 6 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் மாதம் 5 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படுகிறது. மொத்தமாக மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாத உதவித்தொகை

முதல் ஆண்டு ரூ.7,000

இரண்டாம் ஆண்டு ரூ.6,000

மூன்றாம் ஆண்டு ரூ.5,000

மொத்தமாக, ரூ.2,16,000 ரூபாய் மூன்று ஆண்டுகளில் கிடைக்கும்!

410
மேலும் கிடைக்கும் வருமானம் – கமிஷன்

பயிற்சி பெறும் காலத்திலேயே, பெண்கள் LIC பாலிசிகளை விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். முதல் ஆண்டிலேயே, ஒரு பெண் ரூ.48,000 வரை கமிஷன் பெற வாய்ப்பு உள்ளது.இது அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

510
பயிற்சி முடிவில் பெறும் அங்கீகாரம்

பயிற்சி முடிவில், பெண்களுக்கு “பீமா சகி” சான்றிதழ் மற்றும் LIC முகவர் ஐடி/குறியீடு வழங்கப்படும்.அதன் மூலம், அவர்கள் முழுமையான LIC முகவர்களாக பணியாற்றலாம்.தனியாக ஒரு தொழில்முனைவோர் (self-employed insurance agent) ஆகவே அவர்கள் இயங்க முடியும்.

610
திட்டத்தின் முக்கிய இலக்குகள்

கிராமப்புற பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை வழங்குவது. தொழில்முனைவோராக பெண்களை உருவாக்குவது.பெண்களின் பங்களிப்பை குடும்பத்திலும், சமுதாயத்திலும் அதிகரிப்பது.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு வளர்த்தல்.

710
யார் விண்ணப்பிக்கலாம்?

குறைந்தபட்சம் 12ம் வகுப்பு (Higher Secondary) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுவாக 18–45 வயதிற்குள் இருக்க வேண்டும், கிராமப்புற பின்னணியிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

810
தகுதியற்றவர்கள்

LIC ஊழியர்கள் அல்லது ஏஜென்ட்களின் உறவினர்கள், ஓய்வுபெற்ற LIC ஊழியர்கள், முன்னாள் ஏஜென்ட்கள் மற்றும் தற்போதைய ஏஜென்ட்கள் ஆகியோர் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

910
விண்ணப்பிக்கும் முறை

LIC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்: www.licindia.in

“Bima Sakhi Yojana” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்

சுய சான்றிதழ், கல்வி சான்றிதழ், அடையாள அட்டைகளை இணைக்கவும்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

1010
பீமா சகி யோஜனாவின் வலிமை

LIC வழங்கும் பீமா சகி யோஜனா என்பது கிராமப்புறப் பெண்கள் தங்களை நிதியியல் ரீதியாக வலிமையாக்கிக் கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பாகும். இது ஒரு பயிற்சி திட்டமாக இருந்தாலும், பெண்களுக்கு சுயதொழிலாளராகவும், நிச்சயமான வருமானம் பெறும் வாய்ப்பாகவும் மாறுகிறது.பெண்கள் தங்களை இத்திட்டத்தில் இணைத்து, ரூ.2 லட்சத்திற்கு மேல் உதவித் தொகையும், கமிஷன் அடிப்படையிலும் வருமானமும் பெற முடியும். உங்கள் எதிர்கால நலனுக்காக இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories