இந்திய ரயில்வே பயணிகளுக்கு வெறும் 45 பைசாவில் 10 லட்சம் ரூபாய் வரை பயணக் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இந்த விருப்பத் தேர்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்து ரயில்வே பயணிகளுக்கு மத்திய அரசு வழங்கும் சிக்கனமான மற்றும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்று தான் "டிராவல் இன்சூரன்ஸ்", அதாவது பயண காப்பீடு. இந்த திட்டத்தின் மூலம் வெறும் 45 பைசா செலுத்தினாலே ரூ.10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும் என்பதுதான் அதற்கான சிறப்பம்சம். இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள தகவலின் அடிப்படையில், ரயில்வே பயணிகளுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களுக்கு “Optional Travel Insurance” என்கிற விருப்ப தேர்வாக இந்த திட்டம் வழங்கப்படுகிறது.
27
45 பைசா செலுத்தினாலே என்னென்ன காப்பீடு கிடைக்கும்?
பயணியின் இறப்பு ஏற்பட்டால்: ரூ.10 லட்சம்
நிரந்தர உடல் குறைபாடு ஏற்பட்டால்: ரூ.10 லட்சம்
பகுதியளவு உடல் குறைபாடு: ரூ.7.5 லட்சம்
மருத்துவ சிகிச்சைக்கான செலவுக்கு: ரூ.2 லட்சம்
இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக: ரூ.10,000
37
யார் யார் இந்த திட்டத்தை பெறலாம்?
5 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள்
ஆன்லைன் மூலம் IRCTC-வில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள்
Confirmed / RAC டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே
டிக்கெட் முன்பதிவின் போது Travel Insurance என்பதை தேர்வு செய்ய வேண்டும்
அதன் பின் உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு காப்பீட்டு நிறுவனம் தொடர்பு கொள்ளும்
அதில் நாமினி விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்
காப்பீடு பாலிசி அடுத்த சில நிமிடங்களில் உங்களிடம் வந்துவிடும்
57
எப்பெப்போ இந்த காப்பீடு கிளைம் செய்யலாம்?
ரயிலில் விபத்து
பயங்கரவாத தாக்குதல்
வன்முறை சம்பவங்கள்
தீவிர திருட்டு சம்பவங்கள்
67
இதுவரை வழங்கப்பட்ட காப்பீடு
கடந்த 5 ஆண்டுகளில் 333 காப்பீட்டு கிளைம்கள் செட்டில் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.27.22 கோடி இன்சூரன்ஸ் தொகை பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை இந்த காப்பீடு தொடர்பான பணிகளில் தலையிடாது – பயணிகள் நேரடியாக காப்பீட்டு நிறுவனத்தையே அணுக வேண்டும்
77
குறைந்த செலவில் பாதுகாப்பு
ஒரே பயணத்திற்காக வெறும் 45 பைசா செலுத்துவதில், ஒருவர் உயிர் பாதுகாப்பு, உடல்நல காப்பீடு மற்றும் மரண உதவிகள் என அனைத்தையும் பெற முடிகிறது என்பது ஒரு சாதனை. இன்று பெரும்பாலான பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்பது கவலைக்கிடம். உங்கள் அடுத்த பயணத்தின் போது, IRCTC-ல் டிக்கெட் பதிவு செய்யும் போது “Travel Insurance” என்பதை தேர்வு செய்ய மறக்காதீர்கள். வெறும் 45 பைசா செலவில் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்திற்கான ஒரு பெரிய பாதுகாப்பை உறுதி செய்யலாம்.