சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூ.9400 வாக உள்ளது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 75,200 ரூபாயாக உள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் விலை 75 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 127 ரூபாயாகவும், 1 கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.