ஆகஸ்ட் 8 வங்கி விடுமுறை – எந்த மாநிலத்தில் வங்கிகள் மூடப்படும்?

Published : Aug 07, 2025, 11:08 AM IST

தினமும் லட்சக்கணக்கானோர் வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். நாளை ஆகஸ்ட் 8, 2025 அன்று வங்கிக்கு விடுமுறை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதனைப் பற்றி வங்கி வாடிக்கையாளர்கள் அறிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.

PREV
15
ஆகஸ்ட் 8 வங்கி விடுமுறை

வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது நாளை (ஆகஸ்ட் 8) வங்கிகள் திறந்திருக்குமா அல்லது மூடப்படுமா? என்பது பலருக்கும் சந்தேகம். அதிலும் வங்கி வேலை நாட்கள் குறைவாக இருக்கும் போது, மக்கள் பணம் செலுத்துவதிலும், பணம் பெறுவதிலும் திட்டமிட வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 8, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று சில மாநிலங்களில் மட்டும் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என RBI (இந்திய ரிசர்வ் வங்கி) கூறியுள்ளது.

25
எந்த மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்?

ஆகஸ்ட் 8 அன்று சிக்கிம் மாநிலத்தில்தான் மட்டும் வங்கிகள் மூடப்பட உள்ளன. மற்ற மாநிலங்களில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் இயல்பாக திறந்திருக்கும். சிக்கிம் மாநிலத்தில் மட்டும் வங்கிகள் மூடப்படுவதற்கான காரணம் ‘Tendong Lho Rum Phat’ என்ற லிம்பு சமூகத்தின் பாரம்பரிய திருவிழா ஆகும்.

35
ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியல்

இந்த திருவிழா, இயற்கைக்கு நன்றியுள்ள மனதுடன் கொண்டாடப்படுகிறது. அங்குள்ள மக்கள் நம்பிக்கையின் படி, கடந்த காலத்தில் ஒரு பெரும் வெள்ளத்திலிருந்து மக்கள் உயிர்வாழ அந்த மலையே காரணமாக இருந்ததாம். ‘Lho Rum Phat’ என்றால் ‘பூமிக்கு நன்றி’ என பொருள்படும். இதில் பாரம்பரிய பாடல்கள், நடனங்கள், மற்றும் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும்.

45
ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறைகள்

- ஆகஸ்ட் 8 (வெள்ளி) – Tendong Lho Rum Phat (வங்கிகள் மூடப்படும் இடம்: காங்க்டாக், சிக்கிம்)

- ஆகஸ்ட் 9 (சனி) – ரட்சாபந்தன் / ஜூலன் பூர்ணிமா (வங்கிகள் மூடப்படும் இடங்கள்: அஹமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, பூபனேஷ்வர், கான்பூர்...)

- ஆகஸ்ட் 13 (புதன்) – தேசபக்தர்கள் தினம் (மூடப்படும் இடம்: இம்பால்)

- ஆகஸ்ட் 15 (வெள்ளி) – சுதந்திர தினம் (தேசிய விடுமுறை) – முழு நாட்டிலும் வங்கிகள் மூடப்படும்

- ஆகஸ்ட் 16 (சனி) – ஜன்மாஷ்டமி (வங்கிகள் மூடப்படும் இடங்கள்: சென்னை, ஹைதராபாத், பட்டினா)

55
வங்கி விடுமுறை நாள்கள்

- ஆகஸ்ட் 19 (செவ்வாய்) – மஹாராஜா பீர் பிக்ரம் ஜெயந்தி (அகர்தலா)

- ஆகஸ்ட் 25 (திங்கள்) – ஸ்ரீமந்தா சங்கரதேவ் மறைவு தினம் (குவாஹட்டி)

- ஆகஸ்ட் 27-28 (புதன், வியாழன்) – விநாயகர் சதுர்த்தி மற்றும் நுவாகாய் (மும்பை, பனாஜி, ஹைதராபாத்)

வார இறுதி விடுமுறைகள்:

- 3, 10, 17, 24, 31 ஆகஸ்ட் – ஞாயிறு

- 9, 23 ஆகஸ்ட் - இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமை ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories