June Bank Holidays : ஜூனில் 11 நாள் வங்கி விடுமுறை.. பேங்குக்கு கிளம்பும் முன் இதை பாருங்க!

Published : Jun 01, 2026, 01:11 PM IST

June Bank Holidays : ஜூன் 2026-ல் நாடு முழுவதும் மற்றும் மாநில வாரியான விடுமுறைகள் சேர்த்து வங்கிகளுக்கு மொத்தம் 11 நாள் விடுமுறை வருகிறது. செக் டெபாசிட், KYC, லாக்கர் மற்றும் ஆவண வேலைகள் இருந்தால், முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

PREV
16
ஜூன் வங்கி விடுமுறை

ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில், வங்கியில் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பணம் டெபாசிட் செய்வது, செக் கிளியரன்ஸ், KYC அப்டேட், லாக்கர் சேவை அல்லது கடன் ஆவண சரிபார்ப்பு போன்ற பணிகள் இருந்தால், இந்த மாத வங்கி விடுமுறை பட்டியலை முன்கூட்டியே பார்க்காமல் கிளம்புவது சிக்கலை ஏற்படுத்தலாம்.

26
வங்கி விடுமுறை 2026

இந்த ஜூன் மாதத்தில், நாடு முழுவதும் மற்றும் மாநில வாரியான பண்டிகை விடுமுறைகள் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளுடன் முஹர்ரம், YMA தினம், ராஜா சங்கராந்தி, ரெம்னா நி போன்ற பிராந்திய நிகழ்வுகள் விடுமுறை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

36
ஜூன் 2026 வங்கி விடுமுறை நாட்கள்:

• ஜூன் 7 – ஞாயிறு

• ஜூன் 13 – இரண்டாவது சனி

• ஜூன் 14 – ஞாயிறு

• ஜூன் 15 – YMA தினம் / ராஜா சங்கராந்தி (சில மாநிலங்கள்)

• ஜூன் 21 – ஞாயிறு

• ஜூன் 25 – முஹர்ரம் (விஜயவாடா)

• ஜூன் 26 – முஹர்ரம் (பல பகுதிகள்)

• ஜூன் 27 – நான்காவது சனி

• ஜூன் 28 – ஞாயிறு

• ஜூன் 29 – சாந்த் கபீர் ஜெயந்தி (சிம்லா)

• ஜூன் 30 – ரெம்னா நி (ஐஸ்வால்)

46
கவனிக்க வேண்டிய விஷயம்

வங்கி கிளைகள் மூடப்பட்டாலும், டிஜிட்டல் சேவைகள் தொடர்ந்து செயல்படுவது கவனிக்க வேண்டிய விஷயம். IMPS, NEFT, RTGS, மொபைல் பேங்கிங் மற்றும் UPI செயலிகள் வழக்கம் போல் இயங்கும். Google Pay, PhonePe, Paytm போன்ற சேவைகள் தினசரி கட்டணங்களை சிரமமின்றி மேற்கொள்ள உதவும்.

56
வங்கிக்குச் செல்லும் முன் நினைவில் கொள்ளுங்கள்

• உங்கள் மாநிலத்தில் உள்ள வங்கி நிலையை சரிபார்க்கவும்

• ஆவண முக்கிய வேலைகளை விடுமுறைக்கு முன் முடிக்கவும்

• அவசர தேவைக்காக சிறிது ரொக்கம் வைத்திருக்கவும்

• செக் கிளியரன்ஸ் தாமதத்தை கணக்கில் கொள்ளவும்

• மொபைல் பேங்கிங் சேவையை ஆக்டிவாக வைத்திருக்கவும்.

66
ஜூன் மாத வங்கி விடுமுறைகள்

சிறிய திட்டமிடல் கூட பெரிய சிரமத்தை தவிர்க்க உதவும். ஜூன் மாத வங்கி விடுமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது உங்கள் நேரத்தையும் பணியையும் பாதுகாக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories