ரிலையன்ஸ் ஜியோ..
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ஒரே ரீசார்ஜில் 3 ஆண்டுகள் சேவையைப் பயன்படுத்தும் வகையில் ரூ.10,000 மதிப்பிலான பிரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் 5G, அழைப்புகள் மட்டுமின்றி பல கூடுதல் சலுகைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஜியோவின் ரூ.10,000 திட்டம்: என்னென்ன சலுகைகள்?
அடிக்கடி மொபைல் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க விரும்புபவர்களுக்காக இந்த நீண்டகாலத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே முறை ரூ.10,000 செலுத்தி தொடர்ந்து 3 ஆண்டுகள் ஜியோ சேவையைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்தத் திட்டத்தில் கிடைக்கும் முக்கிய சலுகைகள்:
• திட்டத்தின் விலை: ரூ.10,000
• சேவை வேலிடிட்டி: 3 ஆண்டுகள் (36 மாதங்கள்)
• அழைப்புகள்: அன்லிமிடெட் வாய்ஸ் கால்
• தினசரி எஸ்எம்எஸ்: 100 SMS
• தினசரி டேட்டா: 2.5GB
• 5G சேவை: அன்லிமிடெட் 5G டேட்டா