FD Interest Rates: மூத்த குடிமக்களுக்கு செம நியூஸ்! எஃப்.டி-க்கு 8.60% வரை வட்டி!

Published : Nov 07, 2026, 01:03 PM IST

FD Interest Rates: ஓய்வு பெற்ற பிறகு சேமிப்பு பணத்தை எங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்? பல வங்கிகள் பிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை நவம்பர் மாதம் மாற்றியுள்ளன. சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகைகள் உள்ளன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
16
FD Interest Rates

ஓய்வு பெற்ற பிறகு சேமிப்பு பணத்தை எங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்? பல வங்கிகள் பிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை நவம்பர் மாதம் மாற்றியுள்ளன. குறிப்பாக சீனியர் சிட்டிசன்கள் எனப்படும் மூத்த குடிமக்களுக்கு சூப்பரான சலுகைகள் உள்ளன. சில சிறு நிதி வங்கிகள் (Small Finance Banks) 8.60 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

அதேநேரம் HDFC, ICICI, PNB போன்ற பெரிய வங்கிகளும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை அளிக்கின்றன. ஓய்வுக்குப் பிறகு சீரான வருமானத்திற்காக FD-யை நம்பியிருப்பவர்களுக்கு இது ஒரு முக்கிய செய்தி.

26
எந்த வங்கியில் வட்டி அதிகம்?

நவம்பர் 2026-ல் அறிவிக்கப்பட்ட விகிதங்களின்படி, சீனியர் சிட்டிசன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதங்கள் வங்கி வாரியாக இதோ:

வங்கியின் பெயர் - அதிகபட்ச வட்டி விகிதம்

சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் - 8.60%

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் - 8.50%

கோடக் மஹிந்திரா பேங்க் - 7.55%

ஆக்சிஸ் பேங்க் - 7.35%

HDFC பேங்க் - 7.20%

ICICI பேங்க் - 7.20%

பஞ்சாப் நேஷனல் பேங்க் - 7.10%

36
HDFC வங்கியில் வட்டி அதிகரிப்பு

நவம்பர் 4, 2026 முதல் HDFC வங்கி தனது FD வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. சில குறிப்பிட்ட கால அளவுகளுக்கான வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 0.50 சதவீதம் வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர்களுக்குக் குறிப்பிட்ட கால அளவில் கூடுதல் வட்டி சலுகையும் உண்டு. 3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரையிலான காலத்திற்கு அதிகபட்சமாக 7.20 சதவீதம் வட்டி கிடைக்கிறது.

46
ICICI மற்றும் PNB-ல் வட்டி எவ்வளவு?

ICICI வங்கியில் 3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரையிலான FD-க்கு முதியோர்களுக்கு அதிகபட்சமாக 7.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேபோல, PNB-ல் 444 நாட்கள் கொண்ட சிறப்பு FD திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.10 சதவீதம் அதிகபட்ச வட்டி கிடைக்கிறது.

56
ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம்?

ஒரு சீனியர் சிட்டிசன் 5 லட்சம் ரூபாயை FD-யில் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். 8.60% வட்டியில் வருடத்திற்கு தோராயமாக ரூ.43,000 வருமானம் கிடைக்கும். 7.20% வட்டியில் வருடத்திற்கு ரூ.36,000 கிடைக்கும். இந்த இரு வட்டி விகிதங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தில் வருடத்திற்கு சுமார் 7,000 ரூபாய் கூடுதல் வருமானம் ஈட்டலாம்.

ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்?

10 லட்சம் ரூபாயை 8.60 சதவீத வட்டியில் முதலீடு செய்தால் வருடத்திற்கு தோராயமாக 86,000 ரூபாய் வட்டியாகப் பெறலாம். அதே 7.20 சதவீத வட்டியில் வைத்தால் சுமார் 72,000 ரூபாய் கிடைக்கும். அதாவது, வருடத்திற்கு 14,000 ரூபாய் வரை வித்தியாசம் இருக்கும்.

66
FD செய்யும் முன் இதைக் கவனியுங்கள்

அதிக வட்டி கிடைக்கிறது என்று கண்மூடித்தனமாக முதலீடு செய்ய வேண்டாம். DICGC விதிகளின்படி, ஒரு வங்கியில் முதலீடு செய்பவருக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இதில் முதலீட்டுத் தொகை, வட்டி இரண்டுமே அடங்கும். அதனால் பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு முன் வங்கியின் நிதி நிலை, கால அளவு, முன்னதாகவே பணத்தை எடுத்தால் விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி மீதான வரி ஆகியவற்றை சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories