FD Interest Rates: சீனியர் சிட்டிசன்களுக்கு செம நியூஸ்! எஃப்டிக்கு 8.60% வரை வட்டி

Published : Nov 07, 2026, 02:08 PM IST

ரிடையர்மென்ட் பணத்தை எங்கே போட்டால் நல்ல வட்டி கிடைக்கும்? நவம்பர் மாசம் சில பேங்குகள் பிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதத்தை மாத்தியிருக்காங்க. குறிப்பா சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பரான வட்டி தராங்க.

PREV
16
பிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதத்தை மாத்தியிருக்காங்க

ரிடையர்மென்ட் பணத்தை எங்கே போட்டால் நல்ல வட்டி கிடைக்கும்? நவம்பர் மாசம் சில பேங்குகள் பிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதத்தை மாத்தியிருக்காங்க. குறிப்பா சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பரான வட்டி தராங்க. சில ஸ்மால் பைனான்ஸ் பேங்குகள்ல வட்டி 8.60% வரைக்கும் போகுது. அதேசமயம் HDFC, ICICI, PNB மாதிரி பெரிய பேங்குகளும் நல்ல வட்டி தராங்க. அதனால ரிடையர்மென்ட்டுக்கு அப்புறம் ரெகுலர் வருமானத்துக்கு எஃப்டியை நம்பியிருக்கறவங்களுக்கு இது ரொம்ப முக்கியமான நியூஸ்.

26
எந்த பேங்குல வட்டி அதிகம்?

நவம்பர் 2026 நிலவரப்படி, சீனியர் சிட்டிசன்களுக்கு பேங்குகள் தர வட்டி விகிதம் இங்க இருக்கு.

பேங்க் பெயர் அதிகபட்ச வட்டி

Suryoday Small Finance Bank 8.60%

Utkarsh Small Finance Bank 8.50%

Kotak Mahindra Bank 7.55%

Axis Bank 7.35%

HDFC Bank 7.20%

ICICI Bank 7.20%

Punjab National Bank 7.10%

36
HDFC பேங்குல எஃப்டி வட்டி ஏறிடுச்சு

HDFC பேங்க் நவம்பர் 4, 2026-ல இருந்து எஃப்டி வட்டி விகிதத்தை மாத்தியிருக்காங்க. சில காலவரையறைகளுக்கு 0.50 சதவீதம் வரை வட்டி அதிகமாக்கிருக்காங்க. சீனியர் சிட்டிசன்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு கூடுதல் வட்டியும் இருக்கு. 3 வருஷம் 1 நாள்ல இருந்து 5 வருஷம் வரைக்கும் அதிகபட்சமா 7.20 சதவீதம் வட்டி தராங்க.

46
ICICI மற்றும் PNB-ல எவ்ளோ வட்டி?

ICICI பேங்குல 3 வருஷம் 1 நாள்ல இருந்து 5 வருஷம் வரைக்கும் எஃப்டி போட்டா, சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சமா 7.20 சதவீதம் வட்டி கிடைக்கும். அதேமாதிரி PNB-ல 444 நாள் ஸ்பெஷல் எஃப்டி ஸ்கீம்ல சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சமா 7.10 சதவீதம் வட்டி தராங்க.

56
5 லட்சம் எஃப்டி போட்டா எவ்ளோ வரும்?

ஒரு சீனியர் சிட்டிசன் 5 லட்சம் ரூபாயை எஃப்டில போடறதா வெச்சுப்போம். 8.60% வட்டி ரேட்ல வருஷத்துக்கு சுமார் 43,000 ரூபாய் கிடைக்கும். 7.20% வட்டி ரேட்ல வருஷத்துக்கு சுமார் 36,000 ரூபாய் கிடைக்கும். இந்த ரெண்டு வட்டி விகிதத்துக்கும் நடுவுல வருஷத்துக்கு கிட்டத்தட்ட 7,000 ரூபாய் வித்தியாசம் வரும்.

10 லட்சம் போட்டா எவ்ளோ வரும்?

10 லட்சம் ரூபாயை எஃப்டில போட்டா, 8.60% வட்டி ரேட்ல வருஷத்துக்கு சுமார் 86,000 ரூபாய் வட்டி கிடைக்கலாம். ஆனா 7.20% வட்டி ரேட்ல போட்டா வட்டி தொகை சுமார் 72,000 ரூபாய் வரும். அதாவது வருஷத்துக்கு 14,000 ரூபாய் வித்தியாசம் வரும்.

66
எஃப்டி போடறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா மனசுல வெச்சுக்கங்க

அதிக வட்டி தராங்கன்னு மட்டும் பாத்து இன்வெஸ்ட் பண்ணக்கூடாது. DICGC ரூல்ஸ்படி, ஒரு பேங்குல ஒருத்தர் போடற பணத்துக்கு அதிகபட்சமா 5 லட்சம் ரூபாய் வரைக்கும் இன்சூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும். இதுல முதலும் வட்டியும் அடங்கும். அதனால பெரிய தொகையை போடறதுக்கு முன்னாடி பேங்கோட நிலைமை, காலம், சீக்கிரம் பணத்தை எடுத்தா அபராதம், அப்புறம் வட்டிக்கு வரி எல்லாத்தையும் செக் பண்றது ரொம்ப முக்கியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories