கிரெடிட் கார்டில் Minimum Due: எதிர்கொள்ளும் பிரச்சினைகள்!

Published : Jun 11, 2025, 02:31 PM IST

கிரெடிட் கார்டுகளில் மினிமம் கட்டணம் செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது. மினிமம் கட்டணம் செலுத்துவதால் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும் 

PREV
17
பணத்துடன் பர்சில் அங்கமாகும் கிரெடிட் கார்டு

வங்கி கணக்கு தொடங்கிய உடன் நாம் விரும்புகிறோமோ, இல்லையே நம் பர்சில் எப்படியோ ஒரு கிரெடிட் கார்டு நுழைந்துவிடும். ஆளுக்கு ஒரு செல்போன் இருப்பதை போல, ஆளுக்கு ஒரு கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நிலை தற்போது உள்ளது. கிரெடிட் கார்டை சரியாக பராமறிக்கும் சிலர் அதனால் ஆதாயம் அடைந்தாலும், கிரெடிட் கார்டால் சிக்கி தவிப்போர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. பில் கட்டுவதில் சிறுதவறுகள் செய்தால் கூட அது நமக்கு பெரிய சுமையை தலையில் ஏற்றிவிடும். கிரெடிட் கார்டுகளில் மேற்கொள்ளும் செலவுகளுக்கு 45 நாள்களுக்கு வட்டியில்லா காலம் வழங்கப்படுகிறது. அதற்குள் கட்டணத்தை செலுத்திவிட்டால் பிரச்சினையில்லை. அதைத் தாண்டிவிட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்.

27
மினிமம் தொகை 5 சதவீதம்

கிரெடிட் கார்டின் குறைந்தபட்ச செலுத்துதல் என்பது, ஒரு மாத கால அட்டவணைக்கு பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய மிகக் குறைந்த தொகையாகும். இது பொதுவாக உங்கள் நிலுவைத் தொகையில் ஒரு சதவீதப் பகுதியாக கணக்கிடப்படுகிறது. கிரெடிட் கார்டு நிறுவனம் பொதுவாக உங்கள் நிலுவைத் தொகையில் 5% முதல் 10% வரை குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கிறது. உதாரணமாக, உங்களிடம் ரூ.10,000 நிலுவையில் இருந்தால், நீங்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை குறைந்தபட்ச கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

37
வசீகரிக்கும் மினிமம் கட்டணம்

கிரெடிட் கார்டு பில்லில் இடம் பெற்று இருக்கும் மொத்த கட்டணம் அதாவது Total Amount Due- வை விட, அதற்கு அருகே குறிப்பிட்டு இருக்கும் மினிமம் கட்டணம் (Minimum Amount Due) உங்களை எப்போது வசீகரிக்கும். மொத்த தொகை இல்லாத போது மினிமம் கட்டணத்தை நாம் செலுத்தலாம். மொத்த கட்டணத்தில் 5 சதவிகிதம் மினிமம் டுயூவாக செலுத்தவேண்டி இருக்கும். பில்லில் மினிமம் கட்டணம் என்று சொல்லிவிட்டார்கள் என்பதால், பலரும் இந்த மினிமம் கட்டணத்தை மட்டுமே செலுத்தி வருகின்றனர். மொத்த தொகையில் இதனை கணக்கு போட்டு பார்த்தால் மினிமம் கட்டணம் நமக்கு பெரும் சுமையை ஏற்றிவிடும். மேலும் மினிமம் கட்டணத்தை செலுத்தினால், தாமதக் கட்டணம் (late fee) வசூலிக்கப்படாதே தவிர, மீதமுள்ள கட்டணத்துக்கு வட்டி உண்டு என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

47
CIBIL Score பாதிக்கப்படும்

மினிமம் கட்டணத்தை மட்டும் செலுத்துவதால் சிபில் ஸ்கோரும் (CIBIL Score) பாதிக்கப்படும் எனவும் சிபில் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என விரும்புவோர், நிச்சயமாக மினிமம் கட்டணத்தை மட்டும் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள். முடிந்த வரை, ஒவ்வொரு மாதமும் மொத்த பில் கட்டணத்தையும் செலுத்துவதுதான் சிறந்தது. ஒரு வேளை மிகப்பெரிய தொகையாக இருந்தால், கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் பேசி இ.எம்.ஐ-ஆக மாற்றிக்கொள்ளலாம்.

57
Minimum Amount Due நன்மைகள்

கிரெடிட் கார்டு கணக்கை ஒரு நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

கட்டணத்தை செலுத்துவதில் தவறு இன்றி இருக்க உதவுகிறது.

கிரெடிட் ஸ்கோர் கெட்டுப்போகாமல் இருக்க உதவுகிறது.

67
Minimum Amount Due தீமைகள்:

குறைந்தபட்ச கட்டணத்தை மட்டும் செலுத்துவது, மீதமுள்ள தொகையில் வட்டி சேர்க்கப்படுவதால், உங்கள் கடனை மேலும் அதிகமாக்கும்.நீண்ட காலத்தில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.

77
சரியான முறை:

முடிந்தவரை, குறைந்தபட்ச தொகையை விட அதிகமாக செலுத்துங்கள்.

உங்கள் கடன் வரம்பை அதிகப்படுத்துவதைத் தவிர்க்கவும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை கட்டுப்படுத்துங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories