ஐஆர்சிடிசி கோயம்புத்தூரில் இருந்து "ஹோலி காசி" என்ற புதிய ஆன்மீக சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. விமான டிக்கெட்டுகள், தங்குமிடம் மற்றும் வழிகாட்டி சேவைகள் இந்த தொகுப்பில் அடங்கும்.
வட இந்தியாவின் பழமையான கோயில்கள், பௌத்த தலங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் சின்னங்களைக் காண விரும்புவோருக்கு ஐஆர்சிடிசி “ஹோலி காசி” சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயணம் நவம்பர் 18 அன்று கோயம்புத்தூரில் இருந்து துவங்கி, நவம்பர் 23 வரை ஐந்து இரவுகள் மற்றும் ஆறு பகல்கள் நீடிக்கும். விமானங்கள், தங்குமிடம் மற்றும் வழிகாட்டி சேவைகள் முன்பதிவில் டிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளன.
25
வாரணாசி – காசி
இந்த சுற்றுலாவின் முக்கிய இடம் வாரணாசி ஆகும். காசி விஸ்வநாதர் கோயில் பார்வையிட முக்கிய இடமாகும். மாலை நேர கங்கா ஆரத்தியில் பங்கேற்றுப் பார்க்கலாம், அதிகாலை படகு சவாரியில் நதியின் அமைதியான காட்சிகளை அனுபவிக்க முடியும். வழிகாட்டியுடன் பழமையான தெருக்களில் நடந்து நகரின் கலாச்சாரம், சுவைகள், பாரம்பரிய அனுபவங்களை ரசிக்கலாம்.
35
பிரயாக்ராஜ் – திரிவேணி சங்கமத்தின் மையம்
பிரயாக்ராஜ், கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திற்குப் பெயர் பெற்றது. இங்கு புனித நீராடுவது முக்கிய ஈர்ப்பாகும். நகரின் வரலாறு, மத முக்கியத்துவம், பழமையான கோயில்கள் மற்றும் சுற்றியுள்ள கலைமயமான இடங்கள் பயணிகளுக்கு அறிமுகமாகும்.
அயோத்தி, ராமர் கோயிலுடன் தொடர்புடைய ஆன்மீக மையமாகும். ராமாயணக் கதையை விவரிக்கும் கோயில்கள், பக்தி வழிபாட்டு இடங்கள் சுற்றுலாவின் முக்கிய இடமாக அமைக்கப்பட்டுள்ளன. புத்த கயா, கவுதம புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்ற பௌத்த தலமாகும். மகாபோதி கோயில் வளாகம் மற்றும் தியானத் தலங்கள் பயணிகளின் கவனத்தை ஈர்க்கிறது.
55
முன்பதிவு மற்றும் பயண செலவு
இந்த யாத்திரைக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வ ஐஆர்சிடிசி சுற்றுலா இணையதளம் மூலம் செய்யலாம். இதன் டிக்கெட் விலை ஆனது ரூ.39,750 முதல் தொடங்குகிறது. ஆன்மீக அனுபவத்துடன், வரலாறு, கலாச்சாரம், மற்றும் அமைதியான சுற்றுலாவை அனுபவிக்க இது சிறந்த வாய்ப்பு ஆகும். மேலும் விவரங்களுக்கு ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ தளத்தை பார்க்கவும்.