கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலுக்கு கிஃப்ட் ஐடியா! பாஸ்டேக் ஆண்டு பாஸ் வந்தாச்சு!

Published : Oct 21, 2025, 09:02 AM IST

பாஸ்டேக் வருடாந்திர பாஸை இப்போது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசாக வழங்கலாம். இந்த பாஸ் கார், ஜீப், வேன் போன்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

PREV
14
பாஸ்டேக் வருடாந்திர பாஸ்

பயணங்களை விரும்பும் நண்பர்கள், உறவுகளுக்கு இதைவிட சிறந்த பரிசு நீங்கள் கொடுக்க முடியாது என்றே கூறலாம். தேசிய நெடுஞ்சாலைகளிலும், எக்ஸ்பிரஸ் வழித்தடங்களிலும் கட்டண நெரிசலில்லா சுலபமான பயணத்தை உறுதி செய்யும் பாஸ்டேக் வருடாந்திர பாஸ் (FASTag Annual Pass) இப்போது பரிசாக வழங்கலாம். ஒருமுறை செயல்படுத்தினால், நாடு முழுவதும் 1,150-க்கும் மேற்பட்ட டோல் பிளாசாக்களில் எந்த சிரமமுமின்றி பயணம் செய்யலாம்.

24
டோல் இலவச பயணம்

இதற்காக, ராஜ்மார்க் யாத்ரா ஆப்பில் சென்று ‘Add Pass’ என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதில் நீங்கள் பரிசளிக்க விரும்பும் நபரின் வாகன எண் மற்றும் அவரின் தொடர்பு விவரங்களை பதிவிட வேண்டும். பின்னர் OTP மூலம் சரிபார்ப்பு முடிந்தவுடன், அந்த வாகனத்தின் FASTag-இல் Annual Pass தானாகவே செயல்படுத்தப்படும். இது முழுமையாக ஆன்லைனில் முடியும் எளிய செயல்முறை ஆகும்.

34
ரூ.3,000 செலுத்த வேண்டும்

மொத்தம் ரூ.3,000 மட்டும் செலுத்தி, ஒரு வருடம் (அல்லது 200 முறை டோல் கடத்தல் வரை) கட்டணமின்றி பயணம் செய்யலாம். இது தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் பாஸ்டேக் வைத்திருந்தால் இந்த பாஸை உடனே செயல்படுத்தலாம். டோல் கட்டணங்களுக்கான அலைச்சல் இன்றி நீண்ட பயணங்களை சுலபமாகச் செய்ய இது ஒரு புத்தாண்டு ஸ்மார்ட் பரிசாகும்.

44
ராஜ்மார்க் யாத்ரா ஆப்

ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) ஆப்பில் ரூ.3,000 கட்டணத்தை செலுத்திய 2 மணிநேரத்திற்குள் பாஸ் செயல்படும். இது ஒருமுறை கட்டணத்துடன் வரும் ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும் வசதி. 2025 ஆகஸ்ட் 15 முதல் இந்த புதிய ஆண்டு பாஸ் திட்டம் அமலுக்கு வந்தது. எனவே இந்த கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டில், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு “நெரிசலில்லா பயணத்தின் பரிசு” கொடுக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories