ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் பாகிஸ்தானில் பிரீமியம் பெட்ரோல் விலை 200% அதிகரித்துள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பிரீமியம் பெட்ரோல் விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் இந்த 321க்கு விற்பனையாகிறது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்து வருகின்றன. இதற்கு ஈரான் தரப்பிலும் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
25
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையிலான உயர்மட்டக் குழு, இந்த விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு லிட்டர் பிரீமியம் பெட்ரோல் விலை PKR 266.17-லிருந்து PKR 321.17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
35
பிரீமியம் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு PKR 280.86-லிருந்து PKR 335.86 ஆக அதிகரித்துள்ளது. இது சொகுசு வாகனங்களில் பயன்படுத்தப்படும் உயர் ஆக்டேன் எரிபொருள் ஆகும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருள் அல்ல.
போர் பதற்றம் தொடங்கியதும், பாகிஸ்தான் அரசு மார்ச் 6ம் தேதியே சாதாரண பெட்ரோல் விலையை லிட்டருக்கு PKR 55 ரூபாய் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
55
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் விமான டிக்கெட் கட்டணங்களும் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளன. மார்ச் 10 அன்று இதற்கான உத்தரவை பாகிஸ்தான் அரசு பிறப்பித்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.