LPG Cylinder : கேஸ் சிலிண்டர் ஏன் 14 கிலோ இல்லாம, கரெக்டா 14.2 கிலோ இருக்கு? இதுதான் சீக்ரெட்.! இதுக்கு பின்னாடி இவ்வளவு காரணங்கள் இருக்கா?

Published : Mar 23, 2026, 02:51 PM IST

LPG Cylinder Weight Secret : நம்ம வீட்டு சிலிண்டர்ல ஏன் ரவுண்டா 14 கிலோ இல்லாம, 14.2 கிலோ கேஸ் நிரப்புறாங்க? இதுக்கு பின்னாடி இருக்கிற அறிவியல், வரலாற்று காரணங்களையும், தற்போதைய கேஸ் தட்டுப்பாட்டையும் இங்கே விரிவாகப் பார்க்கலாம். 

PREV
16
LPG சிலிண்டர் எடையை தீர்மானிப்பது எது?

நம்ம வீட்டு கிச்சன்ல இருக்குற கேஸ் சிலிண்டர்ல ஏன் 14.2 கிலோன்னு எழுதி இருக்குன்னு யோசிச்சிருக்கீங்களா? 14 இல்லனா 15 கிலோன்னு ரவுண்டா இல்லாம, இந்த புள்ளிவிவரக் கணக்குக்குப் பின்னாடி பெரிய ரகசியமே இருக்கு. இது ஏதோ சும்மா வச்ச நம்பர் இல்ல. பல வருஷ வரலாறு, அறிவியல், பாதுகாப்பு விதிகள் எல்லாம் இதுக்குள்ள அடங்கியிருக்கு. அது பத்தி இங்க பாக்கலாம்.

26
LPG : வரலாற்றுப் பின்னணி.! பர்மா ஷெல் நிறுவனத்தின் பங்கு

இந்தியாவில் வீட்டு உபயோகத்துக்கான LPG பயன்பாடு 1950-களின் இறுதியில்தான் தொடங்கியது. அப்போ, 'பர்மா ஷெல்' என்ற வெளிநாட்டு நிறுவனம்தான் நம்ம நாட்டுக்கு கேஸ் சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம்தான் முதன்முதலில் 14.2 கிலோ என்ற அளவை நிர்ணயித்தது. காலப்போக்கில், பர்மா ஷெல் நிறுவனம் பாரத் பெட்ரோலியமாக (BPCL) மாறினாலும், அந்தப் பழைய அளவை மாற்றவில்லை. நாடு முழுவதும் இன்றும் அதே அளவுதான் பின்பற்றப்படுகிறது.

36
LPG : பாதுகாப்பு, இன்ஜினீயரிங் கணக்குகள்

LPG என்பது ப்ரோபேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களின் கலவை. இதை சிலிண்டர்களில் அதிக அழுத்தத்தில் சேமிக்கிறாங்க. வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த கேஸ் விரிவடையும். சிலிண்டரின் உள் அழுத்தம், வெப்ப விரிவாக்கம், சிலிண்டர் சுவர்களின் வலிமை இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கிட்டுதான் இன்ஜினீயர்கள் 14.2 கிலோ என்ற அளவை முடிவு செய்தார்கள். ஒருவேளை கேஸ் அளவை அதிகரித்தால், சிலிண்டர் சுவர்களின் தடிமனையும் கூட்டணும். இதனால சிலிண்டரின் விலை, எடை ரெண்டுமே அதிகமாகிடும். பாதுகாப்புக்கும் செலவுக்கும் இடையில் ஒரு பேலன்ஸுக்காகத்தான் இந்த முடிவு.

46
LPG : போக்குவரத்து வசதியில் எடையின் பங்கு

ஒரு காலி சிலிண்டரின் எடையோடு 14.2 கிலோ கேஸையும் சேர்த்தால், மொத்த எடை சுமார் 29 முதல் 30 கிலோ வரை இருக்கும். இந்த எடையை ஒரு சராசரி மனிதர் எளிதாகத் தூக்க முடியும்னு ரிப்போர்ட்ஸ் சொல்லுது. கேஸ் டெலிவரி செய்யும் ஏஜென்ட்கள் அல்லது வீட்டில் உள்ளவர்கள் சிலிண்டரை மாற்றும்போது சிரமப்படாமல் இருக்க, இந்த அளவு சரியாக இருக்கும்னு முடிவு செஞ்சாங்க. இதைவிட எடை அதிகமானால், கொண்டு செல்வதிலும் கையாளுவதிலும் சிக்கல்கள் வரும்.

56
LPG : நடுத்தரக் குடும்பங்களின் தேவைகளுக்கு

நிபுணர்களின் கணிப்புப்படி, 14.2 கிலோ கேஸ் ஒரு நடுத்தரக் குடும்பத்துக்கு 30 முதல் 45 நாட்கள் வரை சமையல் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கும். இதனால, வாடிக்கையாளர்கள் அடிக்கடி ரீஃபில் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல, விநியோகஸ்தர்களும் சப்ளை சைக்கிளை திறமையாக நிர்வகிக்க இந்த அளவு உதவுகிறது. கேஸ் நிறுவனங்கள் தங்களது லாஜிஸ்டிக்ஸை திட்டமிடவும் இந்த நிலையான அளவு வசதியாக இருக்கிறது.

66
LPG : தற்போதைய கேஸ் தட்டுப்பாட்டிற்கான காரணங்கள் என்ன?

தற்போது நாட்டின் பல பகுதிகளில் கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது. விநியோக மையங்களில் மக்கள் அதிகாலையிலேயே வரிசையில் நிற்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல்தான். ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் போக்குவரத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா தனது கேஸ் இறக்குமதியில் 60% இந்த வழியாகத்தான் பெறுகிறது. சப்ளை பாதிக்கப்பட்டதால், அரசு வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளித்து விநியோகத்தை முறைப்படுத்தி வருகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories