30 வருடத்துக்குப் பின் உங்கள் சேமிப்புக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும்? கணக்கிடுவது எப்படி?

First Published | Sep 29, 2024, 4:48 PM IST

30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பு என்னவாக இருக்கும்? பணவீக்கம் ரூபாயின் மதிப்பில் செலுத்தும் தாக்கம் எப்படி இருக்கும் என்பதைத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

inflation Effect

பணவீக்கம் என்பது காலப்போக்கில் பணத்தின் மதிப்பு குறைந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கும் ஒரு நிகழ்வு ஆகும். பணவீக்கம் அதிகரித்துவிட்டது என்று சொன்னால், பொருட்களை வாங்கும் பணத்தின் திறன் குறைந்துவிட்டது என்று அர்த்தம்.

inflation Impact

உதாரணத்திற்கு, இருபது ஆண்டுகளுக்கு முன்பு 100 ரூபாய்க்கு வாங்கக்கூடிய பொருள் இப்போது விலை உயர்ந்துள்ளது. இன்று அதே 100 ரூபாயை வைத்து அதே பொருளை வாங்க முடியாது. இன்று 100 ரூபாய்க்கு வாங்கக்கூடிய பொருட்கள் 20-30 ஆண்டுகளுக்குப் பிறகு விலை உயர்ந்ததாக மாறும்.

Latest Videos


Rupees inflation

உங்கள் தாத்தா மற்றும் தந்தை அவர்கள் வேலை செய்யும்போது அவர்கள் பெற்ற சம்பளம் இன்று பலர் சம்பாதிப்பதை விட மிகவும் குறைவாக இருந்திருக்கும். இன்று பார்க்கும்போது அவர்கள் சிறிய ஊதியங்களைப் பெற்றிருந்தாலும், அந்தக் காலத்தில் அந்தப் பணம் அதிக மதிப்பைக் கொண்டதாக இருந்திருக்கும்.

Inflation in 2024

உதாரணமாக, 1950ல், 10 கிராமுக்கு வெறும் 99 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, இன்று, 2024ல், கிட்டத்தட்ட 78,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதை வருமானத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்தால், 1950ல் மாதம் ரூ.200 சம்பாதித்தவர், அதே வாங்கும் சக்தியைப் பெற இன்று மாதம் ரூ.1.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்க வேண்டும். இந்த மாற்றம் பணவீக்கத்தால் நிகழ்கிறது. இவ்வாறுதான் பல ஆண்டுகளாக பணத்தின் மதிப்பு மாற்றியுள்ளது.

Value of money

இதிலிருந்து, 1980களில் லட்சாதிபதியாக இருந்தவர் இன்று ஒரு கோடீஸ்வரராக இருப்பதைக் காணலாம். பணவீக்கத்தால் நிகழும் இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்வது, எதிர்காலத்தைத் திட்டமிடும்போது கருத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான காரணியாகும். பணத்தின் எதிர்கால மதிப்பு என்னவாக இருக்கும் என்று அறிந்துகொண்டு தொலைநோக்குடன் முதலீடுகளை மேற்கொள்ள இந்த அணுகுமுறை மிகவும் முக்கியம்.

What is Inflation?

பெரும்பாலும், பிக்ஸட் டெபாசிட் (FD) அல்லது பிற நிதித் திட்டங்களில் முதலீடு செய்யும்போது, ​​இன்று டெபாசிட் செய்யும் பணம் எதிர்காலத்தில் எவ்வளாக இருக்கும் என்று சிந்திக்கிறோம். ஆனால், பணவீக்கத்தின் காரணமாக 20-30 ஆண்டுகளுக்குப் பின் பெறப்படும் பணம் அதே வாங்கும் சக்தியைக் கொண்டிருக்காது என்பதையும் கவனிக்க வேண்டும்.

Inflation effects in future

பணவீக்கத்தின் விளைவுகளை விளக்குவதற்கு இரண்டு விதமான உதாரணங்களைப் பார்ப்போம். ஒரு நபர் 20 ஆண்டுகளுக்கு முன்பும், 30 ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்த இரண்டு பேரை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 5% என வைத்துக்கொண்டால், இரண்டு பேரிடம் உள்ள ஒரு கோடி ரூபாய் பணத்தின் தற்போதைய மதிப்பை என்னவாக இருக்கும்?

inflation in 20 years

20 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004ஆம் ஆண்டில் ரூ.1 கோடியின் தற்போதைய மதிப்பு (2024): தோராயமாக ரூ.38 லட்சம் மட்டுமே. காரணம், கடந்த 20 ஆண்டுகளில் பணவீக்கம் காரணமாக ஒரு கோடி ரூபாயின் வாங்கும் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது.

Inflation in 30 years

இதேபோல, 30 ஆண்டுகளுக்கு முன்பு, 1994ஆம் வருடத்தில் ஒரு கோடி ரூபாய் கொண்டிருந்த மதிப்பு தற்போது, சுமார் ரூ.23 லட்சம் மட்டுமே. இதற்கும் காரணம் பணவீக்கம்தான். 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரூ.1 கோடியின் மதிப்பு இன்று வெகுவாகக் குறைந்துள்ளது. இது முப்பது வருடங்களாக அதிகரித்து வந்திருக்கும் பணவீக்கத்தின் தாக்கத்தைக் காட்டுகிறது.

Inflation calculations

பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் மதிப்பை எவ்வாறு குறைக்கிறது என்பதை இந்த கணக்கீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. எதிர்கால நிதிப் பாதுகாப்புக்காகத்  திட்டமிடும்போது ரூபாயின் மதிப்பு எப்படி இருகுகம் என்பதை கருத்தில் கொள்வது அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.

click me!