வட்டியை வாரி வழங்கும் அரசு வங்கியில் புதிய பிக்ஸட் டெபாசிட் திட்டம்!

First Published Sep 29, 2024, 3:41 PM IST

பாங்க் ஆஃப் இந்தியா பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. புதிய FD திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 400 நாட்களுக்கு 8.1% வரை வட்டி வழங்கப்படுகிறது.

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா புதிய பண்டிகை கால பிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கவர்ச்சிகரமான வட்டி விகிதமும் அளிக்கிறது. இந்த திட்டம் சாதாரண FD திட்டத்தை விட அதிக வட்டி கிடைக்கிறது. இது தவிர, ரூ.3 கோடிக்கும் குறைவான டெர்ம் டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தையும் புதுப்பித்துள்ளது.

central bank of india gold appraiser fraud case

பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய திட்டத்தின் கீழ், 400 நாட்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பிக்ஸட் டெபாசிட் செய்தால் 7.45% வட்டி வழங்கப்படும். இதில், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.95%, சூப்பர் சீனியர்களுக்கு 8.10% வட்டி கிடைக்கும். இந்த வட்டி விகிதங்கள் திரும்பப் பெற முடியாத வைப்பு நிதிக்கு மட்டுமே.

திரும்பப் பெறக்கூடிய பிக்ஸட் டெபாசிட்டில், பொது குடிமக்களுக்கு 7.30%, மூத்த குடிமக்களுக்கு 7.80% மற்றும் சூப்பர் சீனியர்களுக்கு 7.95% வட்டி தரப்படுகிறது.

Latest Videos


இந்தத் திட்டம் அனைத்து இந்திய குடிமக்களுக்கும், NRE மற்றும் NRO கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 27 முதல் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். இது பாங்க் ஆஃப் இந்தியாவின் அனைத்து கிளைகளிலும், BOI ஆம்னி நியோ செயலி மற்றும் வங்கி இணையதளத்திலும் கிடைக்கிறது.

இந்த பிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.10,000 ஆகவும், அதிகபட்சம் ரூ.3 கோடிக்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். இந்த FD திட்டம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அருகிலுள்ள கிளையைப் பார்வையிடலாம்.

பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் பின்வருமாறு:

7 முதல் 14 நாட்கள் வரை - 3%
15 முதல் 30 நாட்கள் வரை - 3%
31 முதல் 45 நாட்கள் வரை - 3%
46 முதல் 90 நாட்கள் வரை - 4.5%
91 முதல் 179 நாட்கள் வரை - 4.50%
180 முதல் 210 நாட்கள் வரை - 6%
211 முதல் 269 நாட்கள் வரை - 6%
270 நாட்கள் முதல் 1 வருடம் வரை – 6%
1 வருடம் – 6.80%
1 வருடம் முதல் 2 வருடங்களுக்குள் – 6.80%
400 நாட்கள் – 7.30%
2 வருடங்கள் – 6.80%
2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்குள் – 6.75%
3 வருடங்கள் முதல் 5 வயது வரை ஆண்டுகள் - 6.50%
5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை - 6%
8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் - 6%

click me!