சரியான இன்சூரன்ஸ் பாலிசியை எடுப்பது எப்படி? ஆயுள் காப்பீடு முதல் வாகனக் காப்பீடு வரை!

First Published | Sep 29, 2024, 11:22 AM IST

மருத்துவம், ஆயுள், வாகனக் காப்பீடு திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி? இன்சூரன்ஸ் பாலிச எடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் எவை என்று இத்தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

How to choose insurance policies

பொருளாதார அடிப்படையில் எதிர்காலப் பாதுகாப்புக்காக ​​உடல்நலம், ஆயுள் மற்றும் வாகனக் காப்பீடு திட்டங்களை எடுப்பது அவசியம். இன்சூரன்ஸ் பாலிசிகள் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்கும்.

உடல்நலக் காப்பீடு நல்வாழ்வுக்கான முதலீடாகச் செயல்படுகிறது. தேவையான மருத்துவ பராமரிப்புக்கான நிதி உதவியை உறுதி செய்கிறது. ஆயுள் காப்பீடு குடும்பத்தின் நிதி சார்ந்த பாதுகாப்புக்கு துணை நிற்கிறது. வாகனக் காப்பீடு, சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தாண்டி, விபத்துகள் அல்லது சேதம் ஏற்படும்போது நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.

Low premium, high coverage

இந்தக் காப்பீட்டுத் திட்டங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு பாலிசி சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் இன்சூரன்ஸ் பாலிசியின் பாதுகாப்பைப் பெறுவதுடன் பணத்தையும் சேமிக்க முடியும். குறிப்பாக, எதிர்காலத்தில் அதிக நிதிச்சுமை பற்றிய கவலை இல்லாமல் இருக்கும்.

ஆயுள் காப்பீட்டுத் திட்டம் குடும்பத்தினரின் நிதி சார்ந்த எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை வளர்ப்பு, கடனை அடைப்பது போன்ற நிதிப் பொறுப்புகளுக்காக ஆயுள் காப்பீட்டை தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக மலிவான ப்ரீமியம் தொகையுடன் அதிக கவரேஜ் கிடைக்கும் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்கிறார்கள்.

Latest Videos


Insurance Policy

தனிநபர்கள் வயது மற்றும் சேமிப்புகளைப் பொறுத்து ​​முழுமையான ஆயுள் காப்பீட்டிற்கு மாறுவது ஒரு பரந்த எதிர்காலத் திட்டமிடலாக இருக்கும். இது வாழ்நாள் முழுவதும் கவரேஜை வழங்குகிறது. எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பையும் கொடுக்கிறது.

பாலிசி எடுப்பவர்கள் வாங்குபவர்கள் கவரேஜை தவறாமல் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக திருமணம், விவாகரத்து, குழந்தையின் பிறப்பு போன்ற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளுக்குப் பிறகு, பாலிசி கவரேஜ் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

Motor Insurance

தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து விரிவான மோட்டார் கவரேஜை பேலன்ஸ் செய்ய வேண்டும். போதுமான அளவுக்கு சேமிப்பைக் கொண்ட வாகன உரிமையாளர்கள், மாதாந்திர பிரீமியங்களைக் குறைக்கலாம்.

இந்த முறையில் விபத்து ஏற்பட்டால், தனிநபர்கள் செலவுகளுக்கு அதிக பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், காலப்போக்கில் இதன் மூலம் காப்பீட்டு பிரீமியம் செலுத்தும் பணத்தைச் சேமிக்க முடியும். இந்த அணுகுமுறை நெகிழ்வுத்தன்மையை உறுதிசெய்து, போதுமான கவரேஜையும் தருகிறது.

Multi-policy

அடிக்கடி வாகனம் ஓட்டுபவராக இல்லாவிட்டால், பயன்பாடு அடிப்படையிலான பாலிசியைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முறையில் நிலையான பிரீமியம் செலுத்தவதற்குப் பதிலாக, மைலேஜ் அடிப்படையில் பிரீமியம் செலுத்துலாம்.

பணத்தைச் சேமிக்கவும் காப்பீட்டை எளிமையாக நிர்வகிக்கவும் மல்டி-பாலிசி ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். அதே சமயத்தில் சிறப்பான பாலிசி கவரேஜ் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மல்டி-பாலிசி திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம்.

Insurance Coverage

சில நேரங்களில், தனித்தனி பாலிசிகள் சிறந்த கவரேஜை வழங்கக்கூடும். எனவே தேவைகளுக்கு ஏற்ப சிறந்த காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். கவரேஜ், ஏற்கெனவே பாலிசி எடுத்தவர்களின் கருத்துகள், பாலிசி கிளைம் செய்யும் செயல்முறை ஆகியவை பற்றி ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.

ஆன்லைன் பாலிசி ஒப்பீட்டு கருவிகள் வாங்குபவர்களுக்குச் சிறப்பாக உதவி செய்ய முடியும். இது பல்வேறு திட்டங்கள் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்தக் கருவிகள் மிகவும் மலிவு காப்பீட்டுத் திட்டங்களை அடையாளம் காண உதவும். ஆனால், செலவில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது. வாடிக்கையாளர் சேவை, பாலிசிதாரர்களின் கருத்துகள், க்ளைம்களை செட்டில் செய்ய ஆகும் காலம் போன்ற காரணிகளுக்கும் முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.

Insurance advice

பல காப்பீட்டு நிறுவனங்கள் இப்போது மொபைல் அப்ளிகேஷன்களை வழங்குகின்றன. அவை பாலிசியை எளிதாக நிர்வகிக்க பயன்படுகின்றன. க்ளைம்களை தாக்கல் செய்தல், கவரேஜ் விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் பிரத்யேகமான ஆலோசனைகளைப் பெறுதல் போன்றவை மொபைல் ஆப் மூல் எளிமையாகிவிட்டது.

மருத்துவம் ஆயுள் மற்றும் மோட்டார் காப்பீட்டை எடுக்க விரும்பும் மக்கள், தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் நிதி இலக்குகளின் அடிப்படையில் பொருத்தமான பாலிசியை எடுக்க நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம். பாலிசி தொடர்பான சிக்கலான விதிமுறைகளை புரிந்துகொள்ளவும் நிபுணர்கள் உதவி செய்வார்கள். இந்த அணுகுமுறை பாதுகாப்பான கவரேஜை உறுதிசெய்து, நீண்ட கால பொருளாதார நிலைத்தன்மையை வழங்குகிறது.

click me!