Gold Rate
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை சவரன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.
Chennai Gold Rate
கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி ரூ.55,360 என்னும் புதிய உச்சத்தையும் அடைந்தது. பின்னர் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு குறைந்தது. இதனால் அன்றைய தினம் காலை சவரன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில் 2000 ரூபாய் குறைந்து ரூ.52,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.56,760-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.05 உயர்ந்து ரூ.7,095க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (செப்டம்பர் 29) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதாவது சவரன் ரூ.56,760-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.7,095-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,550-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,400-ஆக விற்பனையாகிறது.
Today Silver Rate
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.101.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.