Rs 71 lakh at the age of 21
நவீன காலத்தில் மக்கள் முதலீடு செய்வதற்கான மாற்று வழிகளைத் தேடுகின்றனர். பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. வங்கி FD மற்றும் அரசு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக பங்குச்சந்தையை மாற்று வழியாகப் பார்க்கின்றனர். ஆனால், அரசுத் திட்டங்களில் முதலீடு செய்வது பல நன்மைகளைத் தருகிறது. வரிச் சலுகைகளுடன் அதிக வருமானத்தையும் கொடுக்கும் அரசாங்கத் திட்டங்களில ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
Women Savings Scheme
இந்தத் திட்டம் பெண்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்தவொரு குடிமகனும் 10 வயது அல்லது அதற்கும் குறைவான தனது மகளுக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
8.2% interest
அதிக வட்டி கிடைக்கும் அரசு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 8.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட தொகையை சில வருடங்கள் முதலீடு செய்தால், மகளுக்கு 21 வயது ஆகும்போது, ரூ.71 லட்சத்துக்கும் மேல் மொத்தமாகக் கிடைக்கும்.
SSY deposit
நாடு முழுவதும் உள்ள எந்தத் தபால் அலுவலகக் கிளையிலும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு திறக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையும் வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும்.
After 21 years
இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு மாற்றி அமைக்கிறது. வட்டியின் அதிகரிப்பு அல்லது குறைப்பைப் பொறுத்து முதிர்ச்சி தொகையும் வேறுபடும். டெபாசிட் செய்யும் தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு முன் செலுத்த வேண்டும். இதன் மூலம் அதிகபட்ச வட்டியைப் பெற முடியும். பெண் குழந்தை பிறந்தவுடன் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், 21 ஆண்டுகள் நிறைவடையும்போது முதிர்வுத் தொகை கிடைக்கும்.
1.5 lakhs deposit
இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வருமானத்தைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், அதிகபட்ச பலன் கிடைக்கும். ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு முன் 1.5 லட்சம் ரூபாயை கணக்கில் டெபாசிட் செய்தால் மட்டுமே அதிகபட்ச வட்டியைப் பெற முடியும்.
15 years Post office scheme
இதேபோல 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மொத்த டெபாசிட் தொகை ரூ.22.5 லட்சம். 21 வருடம் கழித்துக் கிடைக்கும் முதிர்வுத் தொகை ரூ.71,82,119 கிடைக்கும். இதில் வட்டி மூலம் கிடைத்துள்ள வருவாய் மட்டும் 49,32,119 ரூபாய். முதிர்வு காலத்தில் கிடைக்கும் இந்தத் தொகைக்கு வரி விலக்கும் உண்டு.