மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிம்மதியாக உறங்கலாம்!

Published : Feb 27, 2026, 01:59 PM IST

ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக இந்தியன் ரயில்வே சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
ரயில் போக்குவரத்து முதுகெலும்பு

இந்திய போக்குவரத்தில் ரயில்கள் உயிர்நாடியாக உள்ளன. இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். பேருந்தில் பெர்த் புக் செய்து சென்றாலும் குலுங்கல் இருப்பதால் நிம்மதியான உறக்கம் இருக்காது. ஆனால் ரயில்கள் பெர்த் புக் செய்து சென்றால் நிம்மதியான உறக்கம் நிச்சயம். ஆனால் இந்த நிம்மதியான உறக்கத்தை வேட்டு வைக்கும் செயல்கள் ரயில்களில் அண்மை காலமாக நடந்து வருகின்றன.

24
இரவு 10 மணிக்கு மேல் விதிமுறைகள் மீறல்

ரயில்களிம் முன்பதிவு பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை செல்போனில் சத்தம் போட்டு பேசக்கூடாது. செல்போனில் படங்கள் அல்லது ரீல்ஸ் பார்க்கும்போது ஹெட்போன் பயன்படுத்த வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் லைட் அணைக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் சமீபகாலமாக இந்த விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. சில இளைஞர்கள் ரயிலில் இரவு பயணம் செய்யும்போது தங்கள் வீடு போல் செல்போனில் அதிக சத்தத்துடன் ரீல்ஸ் பார்ப்பது; படம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

34
மூத்த குடிமக்கள் பெரும் துன்பம்

மேலும் அதிக சத்தத்துடன் செல்போனில் பேசுவது, லைட்களை ஆப் செய்யாமல் இருப்பது என பல்வேறு வேண்டாத செயல்களை செய்து வருகின்றன. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். காசு கொடுத்து பெர்த் புக் செய்தும் நிம்மதியாக உறங்க முடியவில்லேயே என அவர்கள் கவலைப்படுகின்றனர்.

இந்தியன் ரயில்வே எச்சரிக்கை

இந்த நிலையில், மூத்த குடிமக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் வகையில் ரயில்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால், ரீல்ஸ் பார்த்தால், இரவு 10 மணிக்கு மேல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியன் ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

44
என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?

அதாவது ரயில்களில் சத்தமாக பாட்டு, ரீல்ஸ் கேட்கக் கூடாது. ஹெட்போன் பயன்படுத்த வேண்டும். இரவில் செல்போனில் அதிக சத்தத்துடன் பேசக்கூடாது. சக பயணிகளிடமும் அதிக சத்தத்துடன் பேசக்கூடாது. முன்பதிவு பெட்டியில் இரவு 10 மணிக்கு மேல் லைட் அணைக்க வேண்டும். இரவு 10 மணிக்கு மிடில் பெர்த்தை போட்டு விட வேண்டும். காலை 6 மணிக்கு மிடில் பெர்த்தை இறக்கி விட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories