இந்த மாற்றம், குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வீடு வாங்குபவர்களின் ஆவணப் பணிகளை எளிதாக்கும் நோக்கம் கொண்டது. பொதுமக்களின் கருத்துகளுக்குப் பிறகு, இந்த விதி 2026-ல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வருமானவரி விதிகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிவிப்பு, வீடு வாங்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த மதிப்புள்ள சொத்துக்களை வாங்குபவர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் குறைய வாய்ப்பு உள்ளது. வருமானத் துறை முன்வைத்துள்ள புதிய முன்மொழியின் படி, ரூ.20 லட்சத்திற்கு குறைவான சொத்து பரிவர்த்தனைகளுக்கு பான் (PAN) எண்ணை குறிப்பிட வேண்டியது அவசியம் இல்லாமல் இருக்கலாம்.
25
புதிய வருமானவரி விதி
தற்போது நடைமுறையில் உள்ள விதிப்படி, வீடு அல்லது நிலம் போன்ற அசையா சொத்துகள் ரூ.10 லட்சத்தை மீறினால், வாங்கும் மற்றும் விற்கும் தரப்பு இரண்டும் பான் எண் விவரங்களை வழங்க வேண்டும். இதனால் பல சிறிய நகரங்களில் கூட சாதாரண வீடு வாங்கும்போது கூட பான் கட்டாயமாகிறது. ஆனால் புதிய விதி அமலுக்கு வந்தால், இந்த வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
35
வீடு அல்லது நிலம் வாங்குபவர்கள்
இதனால் சிறிய நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் வீடு அல்லது நிலம் வாங்குபவர்களுக்கு ஆவணப்பணிகள் எளிதாகும். குறிப்பாக முதல் முறையாக வீடு வாங்கும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு இது ஒரு நிம்மதியாக இருக்கும். எனினும், இது தற்போது வரைவு மட்டுமே நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளைப் பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். திட்டமிட்டபடி சென்றால், 2026 ஏப்ரல் 1 முதல் இந்த விதிகள் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மேலாக, பரிசாக சொத்து பெறுதல் அல்லது கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ் நிலம் அல்லது குடியிருப்பு மாற்றுதல் போன்ற பரிவர்த்தனைகளுக்கும் பான் விதிகள் பொருந்தும் என கூறினார். குறிப்பிட்ட மதிப்பை மீறும் பரிவர்த்தனைகளில் கண்காணிப்பு கடுமையாக இருக்கும்.
55
ரூ.10 லட்சம் வரம்பு
கடந்த சில ஆண்டுகளில் சொத்து விலைகள் அதிகரித்துள்ளதால், ரூ.10 லட்சம் வரம்பு பல இடங்களில் பொருந்தாததாக மாறியுள்ளது என வரி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் ரூ.20 லட்சமாக உயர்த்துவது தற்போதைய சந்தை நிலைக்கு ஏற்பதாகக் கருதப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.