இந்த தவறுகளை நிறுத்தினால் நீங்களும் கோடீஸ்வரன்தான்! சும்மா நச்சுன்னு 4 விஷயங்கள்!

Published : Jul 02, 2025, 12:53 PM IST

சரியான நிதி பழக்கவழக்கங்கள் இல்லாததால் பலர் வாழ்நாள் முழுவதும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். சில தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம் நிதிச் சுதந்திரத்தை அடையலாம்.

PREV
15
சம்பாதிப்பதும் சேமிப்பதும் ஒன்றுதான்

பணம் சம்பாதித்து செல்வம் சேர்ப்பதற்கும் ஒரே விதிகள்தான். ஆனால் பலர் நிதி பழக்கங்களை சரியாக கவனிக்காததால் வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே கழிகிறது. பள்ளிப்பருவம் முதல் முதுமை வரைக்கும் நம் வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்கள், சூழல்கள், சந்தர்ப்பங்கள் என நிறைய சிக்கல்கள் சந்திக்கிறோம். எல்லோருக்கும் ஒரே மாதிரியான வருமானம், கல்வி, ஆதரவு கிடைப்பதில்லை. அதனால் சிலர் தெரியாமலேயே சில தவறுகளைச் செய்து கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சில விஷயங்களை நிறுத்தினாலே நாம் கோடீஸ்வரனாகலாம்.

25
முதல் தவறு – தாமதமான சேமிப்பு

பெரும்பாலானோர் “பின்னர் சேமிப்பேன்” என்று தள்ளி வைக்கிறார்கள். சிலர் “செலவுக்கு கூட கஷ்டம், இப்போதே சேமித்து என்ன பயன்?” என நினைக்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு. சம்பளம் குறைந்திருந்தாலும், முதல் மாதத்திலிருந்தே ஒரு சிறிய பகுதியை சேமிக்க பழகுங்கள். 1,000 ரூபாயே என்றாலும் தொடர்ந்து சேமித்து வந்தால், ஆண்டுகளில் அது பெரும் தொகையாகத் தேறிவரும். இது உங்கள் எதிர்கால நிதி நிம்மதிக்கு வித்திடும்.

35
இரண்டாவது தவறு – கடனில் சிக்குதல்

சொந்த வீடு, கார் வாங்க வேண்டும் என்பதில் உணர்ச்சி பூர்வமான முடிவுகள் பலர் எடுக்கிறார்கள். வருமானம், சேமிப்பு, வேலை நிலைத்தன்மை ஆகியவை பார்க்காமல் கடனை எடுத்துக் கொள்ளும்போது, கடன் சுமையில் வாழ்க்கை தகர்ந்து விடுகிறது. கிரெடிட் கார்டு தவறு தவிர்க்கவேண்டிய ஒன்று. தேவையில்லாத பொருட்களை கிரெடிட் கார்டில் இ.எம்.ஐ-யில் வாங்கிக் கடனை பெருக்க வேண்டாம். கடன் வாங்கும் முன், உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனை சிந்தித்துப் பாருங்கள்.

45
மூன்றாவது தவறு – பிள்ளைகளின் செலவுகளை அதியமாக்கல்

பிள்ளைகளுக்கு சிறந்தவைகளை தர வேண்டும் என்ற ஆசை நல்லது. ஆனால் அதற்காகவே உங்கள் வருமானத்தை மீறி, லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை தேர்வு செய்வது தவறு. நல்ல கல்வி தரமான பள்ளியில் கிடைக்கும். கட்டணம் மட்டுமே கல்வியின் தரத்தை நிர்ணயிக்காது. தங்களுக்கேற்ப கல்வி செலவு திட்டமிடுவது நிதி நெருக்கடி வராமல் காப்பாற்றும்.

55
நான்காவது தவறு – ஆலோசனை கேட்காமல் முடிவு செய்தல்

நம்மில் பலர் “everything I know” என்ற தம்பட்டம் அடிக்கிறோம். ஆனால் நிதியில் சிறிய தவறும் பெரிய நஷ்டத்தை தரக்கூடும். முதலீடு, சேமிப்பு, வருமான திட்டங்களில் சரியான நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதில் தயங்க வேண்டாம். சிறிய கட்டணத்தில் பெறும் ஆலோசனை, உங்களின் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்பமாக மாறலாம். இந்த நான்கு தவறுகளைத் தவிர்த்து திட்டமிட்டு செயல்பட்டால், உங்கள் சேமிப்பும், முதலீடுகளும் விரைவில் செல்வச் சுருள்களை உங்கள் வாழ்வில் விரிக்க ஆரம்பித்துவிடும். இன்றே மாற்றம் தொடங்குங்கள் – பணக்காரராகும் பாதையில் முதல் அடியை எடுத்து வையுங்கள்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories