தொடர் சரிவுக்குப் பிறகு, ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜூலை 1 அன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, இன்று மேலும் உயர்வைச் சந்தித்துள்ளது. போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்கள் விலை மாற்றங்களுக்குக் காரணமாக அமைகின்றன.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது.
24
கடந்த வாரம் இதுதான் நிலவரம்
கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வந்தது. இந்த சூழலில் ஜூன் 29 மற்றும் 30-ம் தேதிகளிலும் தங்கத்தின் விலை குறைந்திருந்தது.
34
வாரத்தின் முதல் நாளில் உயர்வு
நேற்று முன்தினம் (ஜூன் 30) தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்துவந்த நிலையில், மாதத்தின் முதல்நாளில் (ஜூலை 1) கிடுகிடுவென உயர்ந்தது.
இரண்டாவது நாளாக சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,520-க்கும், ஒரு கிராம் ரூ.9,065-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக விலை தொடர்ந்து சரிந்துவந்த நிலையில், மாதத்தின் முதல்நாளில் நேற்று உயர்ந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.