ஐஸ்கிரீம், சாக்லேட் விலை 20% வரை அதிரடி உயர்வு.! பின்னணி காரணம் கேள்விப்பட்டா ஷாக் ஆகிடுவீங்க.!

Published : Apr 28, 2026, 12:08 PM IST

இந்த கோடையில் ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கும் அனுபவம் எதிர்பார்த்ததுபோல இனிப்பாக இருக்காது போலிருக்கிறது. சில நிறுவனங்கள் ஏற்கனவே விலையை உயர்த்தியுள்ள நிலையில், மேலும் 10% முதல் 20% வரை ஏற்றம் வரலாம் என கூறப்படுகிறது.

PREV
15
ஐஸ்கிரீம் விலை உயர்வு

இந்த கோடைகாலத்தில் குளிர்ச்சியான ஐஸ்கிரீமும் சுவையான சாக்லேட்டும் தான் பலருக்கும் மகிழ்ச்சி. ஆனால் இந்த முறை அந்த இனிப்பு அனுபவம் சற்று “கசப்பாக” மாறப் போகிறது. உலக அரசியல் பதற்றங்கள் காரணமாக, இந்தியாவில் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு சாதாரண விலை உயர்வு அல்ல… உலகளாவிய தாக்கத்தின் பிரதிபலிப்பு.

25
உலக போர் தாக்கம்

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல். அந்த பகுதிகளில் நடைபெறும் மோதல்கள் சர்வதேச கடல் வர்த்தக பாதைகளை பாதித்துள்ளன. குறிப்பாக கப்பல் போக்குவரத்து சிக்கலில் சிக்கியதால், முக்கிய மூலப்பொருட்கள் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் மற்றும் தடை ஏற்பட்டது.

35
சாக்லேட் விலை ஏற்றம்

ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாதாம், பிஸ்தா, ஹேசல்நட் பருப்புகள் மற்றும் கோகோ போன்றவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்போது இந்த பொருட்களின் விலை குறைந்ததால், சந்தையில் விலை அதிகரித்துள்ளது. கடல் மார்க்கம் சிக்கலானதால், பல நிறுவனங்கள் விமான போக்குவரத்துக்கு மாறியுள்ளன. இதனால் போக்குவரத்து செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

45
கோடை விலை உயர்வு

தொழில்துறை வட்டாரங்களின் தகவல்படி, இந்த மூலப்பொருட்களின் விலை 15 முதல் 22 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் தயாரிப்பு செலவில் நேரடியாகப் பிரதிபலிக்கிறது. சில நிறுவனங்கள் ஏற்கனவே 10 சதவீதம் வரை விலையை உயர்த்தியுள்ளன. கோடைகாலத்தில் தேவைகள் அதிகரிக்கும் நேரத்தில் இந்த சவால் வந்திருப்பதால், தரத்தை குறைக்காமல் விலையேற்றம் செய்வது தவிர வேறு வழியில்லை என நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

55
ஐஸ்கிரீம் செலவு அதிகரிப்பு

இதன் தாக்கம் ஐஸ்கிரீம், சாக்லேட் மட்டும் அல்ல. பேக்கேஜிங் பொருட்கள், பானங்கள், கூடவே சில உணவு மற்றும் பான உற்பத்திகளிலும் இந்த நெருக்கடி தாக்கம் செலுத்துகிறது. சுருக்கமாக சொன்னால், இந்த கோடையில் “குளிர்ச்சி” வாங்கணும்னா கொஞ்சம் கூடுதலாக செலவு செய்ய தயாரா இருக்கணும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories