இதில் ஆறு ஏர்பேக், ESC, HAC, VSM, அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் ரைம்டர், மூன்று பாயின்ட் சீட் பெல்ட்கள் ஆகியவை அடங்கும். இதற்கு கூடுதலாக 60-க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பங்கள், OTA அப்டேட்கள், 10 பிராந்திய மொழிகள், 127 குரல் கட்டளைகள், 52 ஹிங்கிலிஷ் குரல் கட்டளைகள், TPMS, ரிவர்ஸ் சென்சார், ஆட்டோ ஹெட்லைட்ஸ் போன்றவை உண்டு.
மேற்கூறிய தள்ளுபடிகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியில் அமலாகாது. நகரம், மாநிலம், டீலர், நிறம், வேரியன்ட், ஸ்டாக் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து சலுகைகள் மாறுபடும். எனவே, கார் வாங்குவதற்கு முன், உங்கள் அருகிலுள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்பில் துல்லியமான தள்ளுபடி விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.