ஸ்மார்ட் முதலீடு! ரூ.2 ஆயிரம் சேமித்தால் ரூ.27 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்!!

First Published | Nov 25, 2024, 8:18 AM IST

கிராமப்புற மக்களை மனதில் வைத்து மத்திய அரசு சிறப்பு காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அனைத்து மக்களுக்கும் காப்பீட்டின் பலனை அளிக்கும் திட்டமாக உள்ளது.

கிராமப்புற மக்களை மனதில் வைத்து மத்திய அரசு சிறப்பு காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அனைத்து மக்களுக்கும் காப்பீட்டின் பலனை அளிக்கும் திட்டமாக உள்ளது.

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பல மடங்கு பயனடைவார்கள்.

18 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று இத்திட்டத்தில் சேரலாம். ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களும் புகைப்படங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.

Latest Videos


இத்திட்டத்தில், நடுவில் டெபாசிட் செய்ய பணம் இல்லாவிட்டாலும், ஓரிரு வருடம் கழித்து இந்தப் பாலிசியைத் தொடரலாம். இந்த பாலிசியை எடுத்தவருக்கு விபத்து மூலம் மரணம் ஏற்பட்டால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு (நாமினி) காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்

உதாரணமாக, 19 வயதில் ரூ.10 லட்சம் காப்பீட்டுக்கு போஸ்ட் ஆபிஸ் எண்டோவ்மென்ட் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால், பிரீமியமாக மாதம் ரூ. 5278 டெபாசிட் செய்ய வேண்டும். 16 ஆண்டுகள் கழித்து, அதாவது உங்கள் 35 வயதில் பாலிசி முதிர்வு அடையும்போது ரூ. 17.68 லட்சம் வரும்.

முதிர்வு வயதை 40 ஆண்டுகள் என வைத்துக்கொண்டால், அதாவது 21 ஆண்டுகளுக்கு பாலிசி பிரீமியத்தை செலுத்த விரும்பினால் மாதம் ரூ. 3866 செலுத்தினால் போதும். முதிர்ச்சியின்போது நீங்கள் ரூ.20 லட்சத்திற்கு மேல் பெறுவீர்கள்.

இந்தப் பாலிசியை 31 வருடங்களுக்குத் தொடர்ந்தால், மாதம் ரூ.2500 வரை டெபாசிட் செய்ய வேண்டும். முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகை ரூ.24.88 லட்சமாக இருக்கும். 36 ஆண்டுகள் பாலிசியை எடுத்தால், மாதம் ரூ.2,000 செலுத்த வேண்டும். இதன் மூலம் முதிர்வுத் தொகையாக ரூ.27.28 லட்சம் பெறலாம்.

click me!