எஸ்பிஐ அம்ரித் கலாஷ்! 400 நாளில் எக்கச்செக்க லாபம் தரும் சூப்பர் திட்டம்!

First Published | Nov 24, 2024, 3:45 PM IST

பிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிலையான வருமானத்தைப் பெறுவது உறுதி. குறுகிய காலத்தில் முதலீடு செய்து பெரிய லாபம் ஈட்ட விரும்பினால், எஸ்பிஐ 400 நாள் திட்டம் சரியான தேர்வாக இருக்கும்.

SBI Amrit Kalash

பிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிலையான வருமானத்தைப் பெறுவது உறுதி. குறுகிய காலத்தில் முதலீடு செய்து பெரிய லாபம் ஈட்ட விரும்பினால், எஸ்பிஐ 400 நாள் திட்டம் சரியான தேர்வாக இருக்கும்.

SBI Amrit Kalash Scheme

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.60% வட்டியுடன் 400 நாள் சிறப்பு FD திட்டத்தை வழங்குகிறது. மார்ச் 31, 2025 வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை டெபாசிட் செய்ய முடியும்.

Latest Videos


SBI Amrit Kalash Interest Rate

அம்ரித் கலாஷ் என அழைக்கப்படும் இந்தத் திட்டம் முதலில் ஏப்ரல் 12, 2023 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் 30, 2023 வரை இதில் முதலீடு செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டது.

SBI Amrit Kalash Investment

அதன் பிறகு டிசம்பர் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 30, 2024 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், மீண்டும் மார்ச் 31, 2024 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

SBI 400 days scheme

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவர்கள், 400 நாட்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யலாம். அதற்கு 7.10% வட்டி விகிதம் வழங்கப்படும். 

Amrit Kalash Fixed Deposit

அம்ரித் கலாஷ் திட்டத்தில் சேரும் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5% வட்டி விகிதம் பெறலாம். இந்தத் திட்டத்தில் மூத்த குடிமக்கள் செலுத்தும் பணத்துக்கு 7.60% வட்டி கிடைக்கும்.

SBI Special FD Schemes

SBI Amrit Kalash பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள எந்த எஸ்பிஐ வங்கி கிளைக்கும் செல்லலாம். ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

click me!