இந்த பயணிகளுக்கு மட்டுமே லோயர் பெர்த்? புதிய விதியை வெளியிட்ட இந்திய ரயில்வே!

First Published | Nov 25, 2024, 7:59 AM IST

இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் வழங்குவது குறித்த சலுகைகள் மற்றும் விதிமுறைகளை விளக்குகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை மற்றும் லோயர் பெர்த் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் இது வழங்குகிறது.

Indian Railway

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களை இனைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்ற காரணங்களால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.

இதனால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே பல சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

Indian Railway

ஒவ்வொரு பயணிகளின் தேவைகளையும் கவனித்துக்கொள்ள ரயில்வே தன்னால் இயன்றவரை முயற்சிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணிக்கின்றனர். அந்த வகையில் ரயில்வே மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு ரயிலில் லோயர் பெர்த் கிடைப்பதை ரயில்வே உறுதி செய்கிறது.

ரயில் டிக்கெட்டில் தள்ளுபடி.. மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு சொல்லப்போகும் குட் நியூஸ்!

Tap to resize

Indian Railway

மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் 

மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க ரயில்வே பல விதிகளை வகுத்துள்ளது. இது அவர்களின் பயணத்தை எளிதாக்குகிறது. மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்தை முன்பதிவு செய்யலாம். மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் எளிதாக ஒதுக்குவது பற்றி IRCTC விளக்கம் அளித்து. பயணி ஒருவர் தனது மாமாவுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததாகவும், கால் வலி காரணமாக கீழ் பெர்த்தை விரும்புவதாகவும், ஆனால் ரயில்வே அவருக்கு மேல் பெர்த்தை வழங்கியதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

Indian Railway

பொது ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்தால், இருக்கை இருந்தால் மட்டுமே சீட் ஒதுக்கீடு கிடைக்கும் என்று எழுதியுள்ளது. இருக்கை இல்லை என்றால் கிடைக்காது. கீழ் பெர்த் ஒதுக்கப்பட்டால் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்ற கீழ் முன்பதிவு செய்தால், உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும்.

இலவச ரயில் பயணம்.. இந்த ரயிலில் யாரும் டிக்கெட் கேட்கமாட்டார்கள்!

Indian Railway

லோயர் பெர்த் முதலில் வருபவருக்கு முன்னுரிமை 

பொது ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு இருக்கைகள் கிடைக்கும் போது மட்டுமே இருக்கைகள் ஒதுக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இருக்கைகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கிடைக்கும். பொது ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.. இருப்பினும், லோயர் பெர்த்துக்கு நீங்கள் TTE-ஐத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு லோயர் பெர்த் என்று அவரிடம் கோரினால் அவர் உங்களுக்கு லோயர் பெர்த்தை ஒதுக்குவார். இதனால் மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் கிடைத்தால் கிடைக்கும்.

Latest Videos

click me!