No Cost EMI
சில்லறை வர்த்தகத்தில் வட்டியில்லா கடன்கள் பிரபலமாக உள்ளன. பல நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குபவர்கள் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், அப்ளையன்ஸ் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க கட்டணமில்லா EMIகளை வழங்குகிறார்கள். கூடுதல் வட்டி செலுத்தாமல் மொத்தச் செலவையும் மாதத் தவணைகளாகப் பிரித்துச் செலுத்தலாம்.
உதாரணமாக, ரூ.60,000 விலையுள்ள ஸ்மார்ட்போனை 12 மாதங்களில் மாதம் ரூ.5,000 செலுத்தி வாங்கலாம். இந்த வசதி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பொருள்களை ஆர்டர் செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும்.
No interest loans for Farmers
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வட்டியில்லா கடன் பெறலாம். விவசாயம் மற்றும் அது தொடர்புடைய பணிகளுக்கு பயனுள்ள வகையில் இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் விதைகள், உரங்கள், உபகரணங்கள் வாங்க இந்தக் கடனைப் பயன்படுத்தலாம்.
சில மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன்களை வழங்குகின்றன. இந்த கடன்களுக்கு அபராதங்களைத் தவிர்க்க சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துதினால் போதும். இத்தகைய திட்டங்கள் விவசாயிகளின் நிதிச்சுமையை குறைத்து விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Interest free loan from Employers
சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குகின்றன. இந்தக் கடன்கள், வீடு, கல்வி அல்லது மருத்துவம் போன்ற தனிப்பட்ட செலவுகளுக்குக் கைகொடுக்கின்றன. அவசரப் பணத்தேவை ஏற்படும்போது பணியாளர்களுக்கு உதவும் வகையில் இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு பெறும் கடனை திருப்பிச் செலுத்துவது பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. வழக்கமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணியாளரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். இந்தக் கடன்களுக்கு வட்டி இல்லை என்றாலும், குறிப்பிட்ட அளவு பணம்தான் கிடைக்கும்.
Microfinance or NGO Loans
சில சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக காரணங்களுக்காக வட்டியில்லா கடன்களை வழங்குகின்றன. பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சிறு தொழில்முனைவோர் அல்லது பெண்களுக்கு இந்தக் கடன்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கல்வி அல்லது சிறு தொழில் தொடங்குவதற்கு வட்டி இல்லாமல் அல்லது மிகக் குறைந்த வட்டியில் கடன்களை வழங்குகின்றன.
Zero-Interest Credit Card Offers
பல கிரெடிட் கார்டுகள் புரொமோஷனுக்கா குறிப்பிட்ட காலத்துக்கு வட்டி இல்லாத EMI ஆப்ஷனை வழங்குகின்றன. இந்தச் சலுகை பெரும்பாலும் சில பிராண்டுகளில் குறிப்பிட்ட பண்டிகைக் காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. அந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் வட்டி இல்லாமல் அதிக விலை உள்ள பொருள்களை வாங்க முடியும். ஆனால், இதற்கு பிரத்யேகமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் இருக்கும். அவற்றைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
Zero Interest Loan Options
வட்டியில்லா கடன்களைப் பெற இதுபோன்ற சில வழிகள் மட்டுமே உள்ளன. இவை சில்லறை விற்பனைத் துறை, அரசாங்க திட்டங்கள் மற்றும் பணிபுரியும் நிறுவனங்களின் மூலம் கிடைக்கக்கூடியவை. கடன் வாங்குபவர்கள் எப்போதும் அனைத்து விதிமுறைகளையும் கவனமாகப் படித்துப் புரிந்துகொண்டு, கடன் வாங்குவது நல்லது.