Old 2 rupees note value
மக்களில் பலர் சிறுகச் சிறுக சேமித்த தொகை எதில் முதலீடு செய்தால் கோடீஸ்வரனாக மாறலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் இலக்கை நோக்கி அடைய தொடர்ந்து விடாப்பிடியாக உழைக்கவும் சரியான இடத்தில் முதலீடு செய்யவும் வேண்டும்.
Old 2 rupees note value
ஆனால் ஒரு 2 ரூபாய் நோட்டு மட்டும் இருந்தால், யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரராக மாறிவிடலாம். அது எப்படி என்று கேட்கிறீர்களா? பழைய 2 ரூபாய் நோட்டுக்கு தேவை அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் பழைய கரன்சிகளை சேகரிப்பவர்கள் பிங்க் நிற 2 ரூபாய் நோட்டை வாங்க ஆர்வமாக உள்ளனர். ஒரு 2 ரூபாய் நோட்டை பல லட்சங்களுக்கு விற்பனை செய்யலாம்.
பிங்க நிற 2 ரூபாய் நோட்டில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன? அதை இப்போது பார்க்கலாம். இந்த 2 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பர் "786" என இருக்க வேண்டும். பிங்க் நிறம் மங்காமல் இருக்க வேண்டும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் இருந்திருக்கிறார். அப்போது அச்சிடப்பட்ட நோட்டு என்பதால் அவருடைய கையொப்பமும் இந்த ரூபாய் நோட்டில் இருக்க வேண்டும்.
இந்த அம்சங்கள் அடங்கியி பிங்க் நிற 2 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால் ஆன்லைனில் அவற்றை விற்பனை செய்யலாம். eBay, Click India போன்ற இணையதளங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்யும் வசதியைத் தருகின்றன. உங்களிடம் உள்ள 2 ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படங்களைப் பதிவிட்டால் போதும். அத்துடன் ரூபாய் நோட்டின் சீரியல் நம்பர், ரூபாய் நோட்டு இருக்கும் நிலை போன்ற தகவல்களையும் பதிவில் குறிப்பிட வேண்டும். அதைப் பார்த்துவிட்டு சேகரிப்பாளர்கள் உங்களை அணுகுவார்கள்.
Old 2 rupees note
ஆனால், பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் போன்றவற்றை ஆன்லைனில் வாங்குவதையோ விற்பதையோ ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆன்லைன் மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும்.