Flight Fuel: விமானம் 2 மணி நேர பயணத்திற்கு எத்தனை லிட்டர் எரிபொருள் குடிக்கும் தெரியுமா? செலவு இத்தனை லட்சமா? தலைசுற்ற வைக்கும் உண்மை.!

Published : Jul 12, 2026, 11:12 AM ISTUpdated : Jul 12, 2026, 11:15 AM IST

Why Flight Ticket is so Expensive: விமானப் பயணங்கள் அதிக செலவு மிக்கதாக இருக்கிறது. இதற்கு காரணம் அதன் எரிபொருள் தேவைதான். ஒரு விமான பயணத்திற்கான எரிபொருள் செலவை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.

PREV
17
Why Flight Ticket is so Expensive

விமானப் பயணங்கள் என்பது விரைவான பயணத்தை வழங்கக்கூடிய ஒரு போக்குவரத்து சேவையாகும். ஆனால் ஒவ்வொரு விமானம் புறப்படுவதற்குப் பின்னாலும் ஆயிரக்கணக்கான லிட்டர் விமான டர்பைன் எரிபொருள் தேவைப்படுகிறது. இரண்டு மணி நேரம் விமானம் பறப்பதற்கு எவ்வளவு எரிபொருள் தேவை? அதற்கு எவ்வளவு செலவு ஆகிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Interesting Facts: துணிகளில் உள்ள XS, XL, XXL என்பதற்கு என்ன அர்த்தம்.? 99% பேருக்கு இது தெரியாது.!

27
ஏவியேசன் டர்பைன் ஃபியூயல்

விமானங்கள் மற்ற வாகனங்களைப் போல பெட்ரோல் அல்லது டீசலில் இயங்காது. அவை ஏவியேசன் டர்பைன் ஃபியூயல் எனப்படும் ஒரு சிறப்பு எரிபொருளை பயன்படுத்தியே இயங்குகின்றன. இது மிகவும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு எரிபொருள் ஆகும்.்கச்சா எண்ணையில் இருந்து கிடைக்கும் துணைப்பொருட்களில் இதுவும் ஒன்று. உலக அளவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் விமான எரிபொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியுள்ளன.

இதையும் படியுங்கள்:  வாஷ்ரூம் vs பாத்ரூம் vs ரெஸ்ட்ரூம்.! மூணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 90% பேருக்கு இது தெரியாது.!

37
விலை நகரத்திற்கு நகரம் மாறுபடுகிறது

இந்தியாவில் ஏவியேசன் டர்பைன் பியூயலுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மதிப்பு கூட்டு வரியை விதிக்கப்படுகிறது. எனவே இதன் விலை நகரத்திற்கு நகரம் மாறுபடுகிறது. இந்த எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஆகும். பிபிசிஎல் ஹச்பி, ஐஓசி போன்ற எண்ணெய் நிறுவனங்கள் விமான நிறுவனங்களுக்கு குழாய்கள் மூலம் எரிபொருளை விநியோகிக்கின்றன. சிறிய விமான நிலையங்களுக்கு டேங்கர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த எரிபொருள் அதிக உயரத்திலும் குறைந்த வெப்பநிலையிலும் உறையாது. இதற்கு அதிக ஆற்றல் அடர்த்தி உண்டு. பயணத்தின் போது தீ விபத்து ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  ஹோட்டல் ரூமில் படுக்கையின் காலடியில் ஏன் வண்ணத் துணி விரிக்கிறார்கள் தெரியுமா? இதன் பின்னணியில் உள்ள ரகசியம்!

47
சிறிய மற்றும் நடுத்தர விமானங்கள் (உள்நாட்டு விமானங்கள்)

நம் நாட்டில் அதிகமாக போயிங் 737 அல்லது ஏர்பஸ் ஏ 320 போன்ற நடுத்தர விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 2500 முதல் 3000 லிட்டர் எரிபொருளை பயன்படுத்துகின்றன. ஒரு மணி நேரத்திற்கான செலவு தோராயமாக ரூ.3 லட்சமாகும். 2 மணி நேரத்திற்கான எரிபொருள் 5000 முதல் 6500 லிட்டர் தேவைப்படும். இந்த இரண்டு மணி நேரத்திற்கு எரிபொருள் செலவு சுமார் ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை ஆகும். சில சமயங்களில் 7000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருள் இருப்புக்காக வைக்கப்படுகிறது. இது போன்ற சமயங்களில் எரிபொருள் செலவு இன்னும் கூடுதலாகிறது.

இதையும் படியுங்கள்:  3-பின் பிளக்கில் ஒரு பின் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? இது உயிரைக் காப்பாற்றும் செம இன்ஜினியரிங் ட்ரிக்.!

57
சர்வதேச விமானங்களுக்கு எவ்வளவு செலவாகும்?

உலக நாடுகளுக்கு இடையே இயக்கப்படும்போது போயிங் 777 அல்லது ஏர்பஸ் ஏ380 போன்ற பிரம்மாண்ட விமானங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 10,000 முதல் 12,000 லிட்டர் வரை எரிபொருள் தேவை இருக்கும். இதற்கு தோராயமாக 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை செலவாகும். 2 மணி நேரத்திற்கு பயணத்திற்கு சுமார் 24 லட்சம் வரை செலவாகும். விமானத்தின் அளவு அதிகரிப்பது, பயணத்தின் தூரம் கூடுவது ஆகியவை எரிபொருள் நுகர்வை எதிர்பாராத அளவிற்கு உயர்த்துகிறது.

இதையும் படியுங்கள்:  Kitchen Sink: இரவு தூங்கச் செல்லும் முன் சிங்க் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை போடுங்க.! இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

67
இரண்டு மணி நேர பயணத்தில் ஒரு தனி நபரின் பங்கு

விமானம் ரன்வேயில் ஓடி, வானில் மேலே எழும்பும்பொழுது இன்ஜின்கள் முழு பலத்துடன் செயல்பட வேண்டும் என்பதால் இந்த சமயத்தில் அதிக எரிபொருள் செலவாகும். காற்றில் குறிப்பிட்ட உயரத்தை அடைந்த பிறகு எரிபொருள் பயன்பாடு ஓரளவு குறையும். நடுத்தர விமானத்தில் இரண்டு மணி நேர பயணத்தில் ஒரு தனி நபரின் பங்காக 28 முதல் 30 லிட்டர் எரிபொருள் செலவாகிறது. விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த செலவில் 40% வரை எரிபொருளுக்கே செலவாகிறது. அதனால்தான் கச்சா எண்ணெயின் விலை உயரும் போதெல்லாம் விமான டிக்கெட் விலையும் எகிறி விடுகிறது.

இதையும் படியுங்கள்:  Bathroom Cleaner: உப்புத் தண்ணி கறையா? பக்கெட், பைப்பை பளபளன்னு மாத்த சூப்பர் டிப்ஸ்!

77
விமானக் கட்டணம் ஏன் உயர்வாக இருக்கிறது?

விமானத்தில் உள்ள இருக்கைகளை பொறுத்து தனி நபருக்கான பயணச்சீட்டு கட்டணமும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய விமானங்களில் கட்டணங்கள் தூரத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன. விமானக் கட்டணம் ஏன் உயர்வாக இருக்கிறது என்பதை இந்த பதிவில் இருந்து தெரிந்து கொண்டீர்களா?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories