அதிக வருமானம் இருந்தும், வாழ்க்கை முறை உயர்வு, கண்ணுக்குத் தெரியாத சிறு செலவுகள், மற்றும் திட்டமிடப்படாத செலவுகளால் பலரால் சேமிக்க முடிவதில்லை. சரியான நிதி திட்டமிடல் செய்வதே இதற்குத் தீர்வாகும்.
பலர் இன்று நல்ல சம்பளம் பெறுகிறார்கள். ஆனாலும் மாத முடிவில் கணக்கு பார்த்தால் சேமிப்பு இல்லாத நிலைதான் தெரிகிறது. “சம்பளம் அதிகமா இருந்தா சேமிப்பும் அதிகமா இருக்கும்” என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. ஆனால் நடைமுறையில் அதற்கு மாறானதுதான் நடக்கிறது. கைக்கு வரும் பணம் எங்கே போகிறது என்று தெரியாமல் மறைந்து விடுகிறது. இதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் உள்ளன.
24
சின்ன செலவுகள் பெரிய பாதிப்பு
முதலில், ‘லைஃப்ஸ்டைல் இன்ஃப்லேஷன்’ என்பது பெரிய காரணம். வருமானம் உயரும்போது வாழ்க்கை முறையும் மெதுவாக உயர்கிறது. அதிக வாடகை வீடு, புதிய கார், பிராண்டட் பொருட்கள், புதிய கேட்ஜெட்கள் என ஆசைகள் கூடிக்கொண்டே போகின்றன. இதனால் சம்பள உயர்வு முழுவதும் செலவிலேயே கரைந்து விடுகிறது. அதோடு, வீட்டு வாடகை அல்லது EMI, கார் லோன், இன்ஷூரன்ஸ், பள்ளி கட்டணம் போன்ற நிரந்தர செலவுகள் மாதந்தோறும் பெரிய பங்கைக் கவ்வி விடுகின்றன.
34
சேமிக்க முடியலையா?
இதற்குப் பிறகு, நம்மைக் கண்ணுக்குத் தெரியாமல் பணத்தை காலி செய்யும் ‘சின்னச் சின்ன’ செலவுகள் இருக்கின்றன. ஆன்லைன் உணவு ஆர்டர், தேவையில்லாத ஷாப்பிங், டாக்ஸி பயன்பாடு, OTT சப்ஸ்கிரிப்ஷன் போன்றவை ஒவ்வொரு முறையும் குறைந்த தொகையாக இருந்தாலும், மொத்தமாக சேர்க்கையில் பெரிய தொகையாக மாறுகிறது. இதற்கு மேலாக, பலருக்கு “மிச்சம் இருந்தால் சேமிக்கலாம்” என்ற பழக்கம் தான் உள்ளது. சம்பளம் வந்த உடனே சேமிப்பை பிரித்து வைக்காததால், கையில் இருக்கும் பணம் முழுவதும் செலவாகிவிடுகிறது.
மேலும், முக்கிய எதிர்பாராத செலவுகளும் சேமிப்பை பாதிக்கும் காரணம். மருத்துவச் செலவுகள், வண்டி சரிசெய்தல், விழா அல்லது பயணம் போன்றவை திடீரென வந்துவிடும். இவற்றுக்காக முன்கூட்டியே திட்டமிடாததால் சேமிப்பு குன்றுகிறது. இதை சரிசெய்ய ஒரே வழி சேமிப்பையும் முதலீட்டையும் வாழ்க்கையின் நிரந்தர பழக்கமாக மாற்றுவது. சம்பளம் கிடைத்தவுடன் ஒரு பகுதியை ஒதுக்கி வைப்பது, செலவுகளை கட்டுப்படுத்துவது மற்றும் சரியான நிதி திட்டமிடல் செய்வது தான் நிதி நிலையை உறுதி செய்யும் பாதை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.