Business Ideas: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? ரூ.1 லட்சம் முதலீடு போதும்.. டாப் 5 பிசினஸ் ஐடியாக்கள் இதோ!

Published : Apr 20, 2026, 05:17 PM IST

Business Ideas: ரூ.1 லட்சத்துக்கும் குறைவான முதலீட்டில் நீங்கள் தொழில் தொடங்கி கைநிறைய பணம் சம்பாதிக்கலாம். என்னென்ன தொழில்கள் தொடங்கலாம்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

PREV
14
டிராப் ஷிப்பிங் (Drop Shipping)

டிராப் ஷிப்பிங் பிசினஸில் நீங்கள் எந்தப் பொருளையும் கையிருப்பில் (stock) வைத்துக் கொள்ள தேவையில்லை. ஆன்லைனில் விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு பாலமாக இருந்து கமிஷன் சம்பாதிக்கலாம். இதற்கு உங்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் தெரிந்து இருக்க வேண்டும். எல்லாப் பொருட்களையும் விற்க முயற்சிப்பதை விட, ஒரு குறிப்பிட்ட பிரிவை குறிப்பாக செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள், கிச்சன் கேட்ஜெட்ஸ் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பது அவசியம் ஆகும். குறைந்த எடை கொண்ட, ஆனால் அதிக விலைக்கு விற்கக்கூடிய பொருட்களைத் தேர்ந்தெடுப்பது ஷிப்பிங் செலவைக் குறைக்கும்.

24
ஹோம் பேக்கரி (Home Bakery)

வீட்டில் இருக்கும் ஓவன், ஃபிரிட்ஜ் வைத்தே பேக்கரி ஐட்டங்கள் செய்து விற்கலாம். பிறந்தநாள், பார்ட்டிகளுக்கு ஸ்பெஷல் கேக் ஆர்டர் கொடுத்தால் பிசினஸை இன்னும் நன்றாக வளர்க்கலாம். ஆனால் உணவு சார்ந்த தொழில் என்பதால் FSSAI (Food Safety and Standards Authority of India) பதிவு செய்வது மிக முக்கியம். வீட்டிலேயே செய்வதால் இதற்கு மிகக் குறைந்த கட்டணமே ஆகும். வாடிக்கையாளர்கள் கவரும் தரமான பொருட்கள் கொடுப்பது மிக முக்கியமாகும்.

வாட்டர் பாட்டில் பிசினஸ் (Water Bottle Business)

வாட்டர் பிளான்ட் உடன் டை-அப் வைத்து உங்கள் சொந்த பிராண்ட் பெயரில் வாட்டர் பாட்டில் சப்ளை பண்ணலாம். இல்லையென்றால் ரூ.80,000 முதலீட்டில் சின்னதாக‌ ஒரு வாட்டர் பிளான்ட் அமைத்து அக்கம்பக்கத்தில் வாட்டர் கேன் சர்வீஸ் பண்ணலாம். பேக் செய்யப்பட்ட குடிநீருக்கு ISI முத்திரை அவசியம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணீரின் தரம் தான் உங்கள் விளம்பரம். ஆக்வே உங்கள் வாட்டர் பிளான்ட்டில் என்னென்ன சுத்திகரிப்பு முறைகள் இருக்கின்றன என்பதை வாடிக்கையாளரிடம் தெரிவிபப்து முக்கியம்.

34
போட்டோகிராபி (Photography)

ஒரு நல்ல கேமரா வாங்கி போட்டோகிராபி சர்வீஸ் ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல ஒரு புரொபஷனல் கோர்ஸ் படித்தால் அல்லது யாரிடமாவது இன்டர்ன்ஷிப் செய்தால் தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளலாம். இந்த பிஸினசில் சாதிக்க ஒரு நல்ல கேமரா மட்டும் போதாது. போர்ட்ரெய்ட் எடுக்க 50mm அல்லது 85mm லென்ஸ், வைட் ஆங்கிள் ஷாட்களுக்கு 24-70mm போன்ற லென்ஸ்கள் தேவை. தற்போது புகைப்படங்களை எளிதாக மெருகேற்ற பல AI கருவிகள் வந்துள்ளன, அவற்றை பயன்படுத்தத் தெரிந்திருப்பதும் அவசியம்.

44
ஈவென்ட் மேனேஜ்மென்ட் (Event Management)

சின்னச் சின்ன ஃபங்ஷன், பர்த்டே பார்ட்டிகளை நடத்திக் கொடுத்து இந்த பிசினஸை ஆரம்பிக்கலாம். லைட்டிங், சவுண்ட், டெக்கரேஷன் ஆட்களுடன் ஒரு நெட்வொர்க் வைத்துக் கொண்டால் ஈவென்ட்களை சுலபமாக‌ ஹோஸ்ட் பண்ணலாம். இந்த பிசினஸ் ஐடியாக்களை பார்த்தோம் என்றால் ஒரு ஈவென்ட் வெற்றிகரமாக அமைய உணவு மிக முக்கியம். 

தரமான மற்றும் சுவையான உணவு வழங்குபவர்களைத் தேடி வைத்துக்கொள்ளுங்கள். வாடிக்கையாளருக்கு விலைப் பட்டியல் கொடுக்கும்போது, எதிர்பாராத செலவுகளுக்காக ஒரு 5-10% தொகையைச் சேர்த்துத் திட்டமிடுங்கள். ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் ரிசார்ட்டுகளுடன் முன்கூட்டியே பேசி வைத்தால், உங்களுக்குக் குறைந்த விலையில் இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories