Training: மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! வாழ்க்கையை மாற்றும் 3 நாள் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?.!

Published : Apr 20, 2026, 10:33 AM IST

புதுக்கோட்டையில் 3-நாள் சிறப்பு தையல் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் புதிய தையல் நுட்பங்கள், வாடிக்கையாளர்களைப் பெறுவது மற்றும் தொழிலை வளர்ப்பது போன்றவை கற்றுத்தரப்படும், இது மாதம் ரூ.40,000 வரை வருமானம் ஈட்ட உதவும்.

PREV
15
வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்

இன்றைய காலத்தில் ஒரு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் பெரிய படிப்பு அல்லது வெளிநாடு வேலை மட்டுமே வழி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், சரியான திறமையும் பயிற்சியும் இருந்தால் சிறிய தொழிலிலிருந்தே பெரிய வருமானத்தை சம்பாதிக்க முடியும். குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டக்கூடிய துறைகளில் தையல் தொழில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த துறையில் புதிய நுட்பங்களை கற்றுக்கொண்டால் மாதம் ரூ.40,000 வரை சம்பாதிப்பது கூட சுலபமாகிவிடும்.

25
3 நாள் சிறப்பு பயிற்சி

அந்த வகையில், “Advanced Tailoring with New Techniques Training” என்ற பெயரில் 3 நாள் சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி 2026 ஏப்ரல் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி, புதுக்கோட்டை பகுதியில் உள்ள காயத்ரி கார்மெண்ட்ஸ் மையத்தில் நடத்தப்படுகிறது. தையல் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே இந்த துறையில் உள்ளவர்களுக்கும் இது ஒரு அப்டேட் வாய்ப்பாக இருக்கும்.

35
ஆர்டர்கள் எப்படி பெற வேண்டும்?

இந்த பயிற்சியின் முக்கிய சிறப்பு என்னவென்றால், தற்போதைய மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் உள்ள புதிய டிசைன்கள் மற்றும் வேகமான தையல் முறைகள் கற்றுத்தரப்படுகின்றன. அதேசமயம், கஸ்டமர்களை எப்படி ஈர்க்க வேண்டும், ஆர்டர்கள் எப்படி பெற வேண்டும், ஒரு சிறிய தொழிலை பெரிய வியாபாரமாக மாற்றுவது எப்படி என்பதையும் நடைமுறை உதாரணங்களுடன் விளக்கப்பட உள்ளது. இதனால், பயிற்சி முடிந்தவுடன் நேரடியாக வருமானம் ஈட்டும் வாய்ப்பு உருவாகும்.

45
மூன்று நாள் பயிற்சிக்கான கட்டணம்

மூன்று நாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.3000 மட்டுமே. இந்த கட்டணத்தில் பயிற்சி பொருட்கள் மற்றும் முழுமையான கற்றல் அனுபவம் வழங்கப்படுகிறது. தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் புதுமை நிறுவனம் (EDII) சார்பில் இந்த பயிற்சி ஒருங்கிணைக்கப்படுவதால், தரமான கற்றல் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

55
நேரடியாக தொடர்புகொள்ளவும்

மேலும் விவரங்களுக்கு 9786644817, 9080609783 மற்றும் 9360221280 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். info@editn.in மற்றும் adldir.edii@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் தகவல் பெறலாம். வாழ்க்கையை மாற்றிக்கொள்ள ஒரு சிறிய முயற்சி போதும்… இந்த 3 நாள் பயிற்சி உங்களுக்கு அந்த வாய்ப்பை தரலாம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories