Published : Dec 28, 2022, 01:02 PM ISTUpdated : Dec 28, 2022, 05:40 PM IST
இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழுபவர் ரத்தன் டாடா. 1937ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பிறந்த அவர் இன்று தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்து கூறிவருகிறார்கள்.
சிறந்த தொழிலபதிராக சாதனைகள் புரிந்துள்ள அவர் தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளராவும் பெயர் பெற்றவர். மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட அவரது பேச்சு பலருக்கும் ஊக்கம் கொடுக்கக்கூடியது. இத்தொகுப்பில் ரத்தன் டாடாவின் அத்தகைய சில பொன்மொழிகளைப் பார்க்கலாம்
27
“வெற்றி பெற்ற இன்னொருவரின் ஸ்டைலை காப்பி அடித்து அப்படியே பின்பற்றுவர்கள் வெற்றி பெறலாம். ஆனால் அது தற்காலிமானதாகத்தான் இருக்கும். மேலும் மேலும் வெற்றிகளைக் குவித்து முன்னேற முடியாது.”
37
“ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள் தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.”
47
“இரும்பை எளிதாக அழித்துவிட முடியாது. ஆனால், துருப்பிடித்த இரும்பு பயனில்லாமல் போகிறது. நம் மனதையும் துருப்பிடிக்காமல் வைத்துக்கொண்டால் நம்மை யாரும் எளிதில் வீழ்த்திவிட முடியாது.”