Interest Rates On Fixed Deposit: பிக்ஸட் டெபாசிட்டுக்கு தனியார் வங்கிகளின் அதிகபட்ச வட்டிவீதம் என்ன தெரியுமா?

First Published May 26, 2022, 1:21 PM IST

Interest Rates On Fixed Deposits: fixed deposit : RBI repo rate : repo rate: Private Banks Increased Interest Rates on Fixed Deposits ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியபின், தனியார் வங்கிகள் ஓர் ஆண்டுக்கான வைப்பு நிதிக்கான வட்டி அதிகபட்சமாக 6.25 சதவீதமாக வழங்குகின்றன. அது குறித்த செய்தியை காணலாம்.

வட்டி உயர்வு

நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது.கடந்த 4 ஆண்டுகளுக்குப்பின் வட்டி வீதம் உயர்த்தப்பட்டு 4.40 சதவீதமாக அதிகரித்தது.

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வீதம் உயர்த்தப்பட்டபின், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, மகிந்திரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் ஓர் ஆண்டுக்கான வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. சிறிய தனியார் வங்கிகள் ஓர் ஆண்டு வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 6.25 சதவீதம் வழங்குகின்றன.

வைப்புத்தொகை பாதுகாப்பு

பங்குச்சந்தையில் ஏற்படும் நிலையற்ற சூழல், இடர்பாடுகள் ஆகியவற்றால் முதலீட்டை பாதுகாப்பாக மாற்ற முதலீட்டாளர்கள் வைப்புத் தொகையே விரும்புகிறார்கள்.

வைப்புத் தொகை இருக்கும்போது, எப்போது வேண்டுமானாலும் எடுக்க முடியும். அவசரநேரத்தில் சேமிப்பை எடுத்து பயன்படுத்த முடியும். அதனால்தான் வைப்புத்தொகையை முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள்

ஆர்பிஎல் வங்கி அதிகபட்சம்

ஆர்பிஎல் வங்கி ஓர் ஆண்டுக்கான வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. தனியார் வங்களில் அதிகபட்சமாக இந்த வங்கிதான் சிறந்த வட்டிவீதம் வழங்குகிறது. ரூ.ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் ஓர் ஆண்டில் ரூ.ஒரு லட்சத்து 6ஆயிரமாக அதிகரிக்கும். 

இன்டஸ்இன்ட் வங்கி

இன்டஸ்இன்ட் வங்கி  ஓர் ஆண்டு வைப்புத் தொகைக்கு 6 சதவீதம் வட்டி வழங்குகிறது. ஒரு லட்சம் ரூபாயை ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்தால் ரூ.1.06 லட்சம் கிடைக்கும். குறைந்தபட்சமாக ரூ.10ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும்

பந்தன் வங்கி

பந்தன் வங்கி, ஐடிஎப்சி வங்கி,யெஸ் வங்கி ஆகியவை ஓர் ஆண்டு வைப்புத் தொகைக்கு 5.75 சதவீம் வட்டி வழங்குகின்றன. ஒரு லட்சம்  ரூபாயை ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்தால் ரூ.1.05 லட்சம் கிடைக்கும். பந்தன் வங்கியில் குறைந்தபட்சமாக ரூ.ஆயிரமும், யெஸ்வங்கியில் குறைந்தபட்சம் ரூ.10ஆயிரமும் முதலீடு செய்யலாம்

டிசிபி வங்கி

டிசிபி வங்கி ஓர் ஆண்டு வைப்புத் தொகைக்கு 5.55 சதவீதம் வட்டி வழங்குகிறது. ஓர் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ.1.05 லட்சம் கிடைக்கும். குறைந்தபட்சமாக ரூ.10ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும்

பெடரல் வங்கி

பெடரல் வங்கி, கோடக் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி ஆகியவை ஓர் ஆண்டு வைப்புத் தொகைக்கு 5.40 சதவீதம் வட்டி வழங்குகின்றன. ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால், ஓர் ஆண்டுக்குப்பின் ரூ.1.05 லட்சம் பெறலாம்.  

பெடரல் வங்கியில் குறைந்தபட்சம் ரூ.1000, கோடக் வங்கியில் குறைந்தபட்சம் ரூ.5ஆயிரமும், கரூர்வைஸ்யா வங்கியில் ரூ.100 டெபாசிட் செய்யலாம்

டெபாசிட் காப்பீடு

புதிதாக செய்யப்படும் டெபாசிட்களுக்கு சிறிய தனியார் வங்கிகள் அதிகபட்சமாக வட்டி வழங்குகின்றன. இந்த டெபாசிட்களுக்கு வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதிக்கழகமும் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்குகின்றன.

click me!