lic ipo listing date: lic listing date: எல்ஐசி ஐபிஓ கடந்து வந்த பாதை: பங்குச்சந்தையில் நாளை தடம்பதிக்கிறது

First Published May 16, 2022, 10:39 AM IST

lic ipo listing date: lic listing date:  எல்ஐசி ஐபிஓ வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் நாளை எல்ஐசி பங்குகள் லிஸ்டிங் செய்யப்படுகின்றன. நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ விற்பனை நடந்து முடிந்தநிலையில் நாளை லிஸ்டிங் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்ஐசி பங்கு விற்பனை கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

மத்திய அரசின் இலக்கு

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளி்ல் 5 சதவீதத்தை விற்று ரூ.55ஆயிரம் கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டது. 

இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் வரைவு அறிக்கையை எல்ஐசி செபியிடம் தாக்கல் செய்தது.

உக்ரைன் ரஷ்யப் போரால் சர்வதேச சூழல் பதற்றமானது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு , கச்சா எண்ணெய்விலை உயர்வு போன்ற காரணங்களால் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு குறையும் என்பதால் மத்திய அரசு பங்கு விற்பனை அளவைக் குறைத்தது. 

5 சதவீத பங்குவிற்பனையை மாற்றி 3.5 சதவீதப் பங்குகளை மட்டும் விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி 3.5 சதவீதப் பங்குகளை விற்று ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டது.

எல்ஐசி ஐபிஓ விற்பனை

எல்ஐசி ஐபிஓ விற்பனை கடந்த 2ம் தேதி தொடங்கியது. முதலில் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு பங்குவிற்பனை நடந்தது. 

4ம் தேதி முதல் 9ம் தேதிவரை பொது முதலீட்டாளர்களுக்கு பங்கு விற்பனை நடந்தது. 

எல்ஐசி பங்கு விலை

எல்ஐசியின் ஒரு பங்குவிலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டது.

பொது முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனையில் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும் தரப்பட்டது.

இதன்படி பொதுமுதலீட்டாளர்களுக்கு  ஒரு பங்கு ரூ.889 விலையிலும், சில்லரை முதலீட்டாளர்கள் , எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கு விலை ரூ.904 ஆகவும் விற்கப்பட்டது. 

பங்கு ஒதுக்கீடு

எல்ஐசி ஐபிஓ விற்பனை முடிந்தபின் கடந்த 12ம் தேதி தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பங்குகள் அவர்களின் டீமேட் கணக்கில் சேர்க்கப்பட்டது.

எல்ஐசியின் ஒரு பங்குவிலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டு விற்பனையானது. ஆனால், ஒட்டுமொத்த விற்பனையின் முடிவில், விண்ணப்பங்கள் அடிப்படையில்  ஒரு பங்கின் விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டது

எல்ஐசி நிறுவனத்தின் 16 கோடியே 20 லட்சத்து 78 ஆயிரத்து 67 பங்குகளை வாங்குவதற்கு  47 கோடியே, 83 லட்சத்து67ஆயிரத்து  10 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது 2.95 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. 

எல்ஐசி ஐபிஓவுக்கு வரவேற்பு

எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் விருப்ப விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 4.4 மடங்கு கூடுதலாக வந்தன. 

சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட அளவைவிட 2 மடங்கு, ஏறக்குறைய ரூ.12 ஆயிரத்து 450 கோடிக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தன.

எல்ஐசி நிறுவனத்தின் 16 கோடியே 20 லட்சத்து 78 ஆயிரத்து 67 பங்குகளை வாங்குவதற்கு  47 கோடியே, 83 லட்சத்து67ஆயிரத்து  10 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது 2.95 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. 
 

கிரே மார்க்கெட்டில் விலை

எல்ஐசி பங்கு விற்பனை தொடங்கி முதல் நாளில் கிரே மார்க்கெட்டில் ஒரு பங்கின் விலை உண்மையான விலையைவிட ரூ.80க்கும் அதிகமாக விற்பனையானது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கிரே மார்க்கெட்டில் ப்ரீமியம்விலை 90 சதவீதம் குறைந்து விற்பனையானது. இன்னும் கிரே மார்க்கெட்டில் எல்ஐசி ஐபிஓ விலை பாசிட்டிவ் விலைக்கு வரவில்லை. 

மிகப்பெரிய ஐபிஓ

இந்தியாவில் இதுவரை நடந்த ஐபிஓக்களில் மிகப்பெரியது எல்ஐசி ஐபிஓதான். இதற்கு முன் பேடிஎம் ஐபிஓவில் பங்கு விற்பனை மூலம் ரூ.18500 கோடி சேர்க்கப்பட்டது.

ஆனால் அதைவிட கூடுதலாக ரூ.20ஆயிரம் கோடிக்கும் அதிகமாக எல்ஐசி ஐபிஓவில் நிதி திரண்டுள்ளது. இதற்கு முன் அதிகமாக கடந்த 2008ம் ஆண்டு ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் ஐபிஓ நிதி திரட்டியிருந்தது.

எல்ஐசி பங்கு பங்குச்சந்தையில் லிஸ்டிங்

எல்ஐசி பங்குகள் விற்பனை வெற்றிகரமாக நடந்து மத்திய அரசுக்கு ரூ.20ஆயிரத்து 560 கோடி நிதி கிடைத்துள்ளது.

பங்குதாரர்களுக்கு பங்குகளை வெற்றிகரமாக ஒதுக்கிய நிலையில் தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் நாளை லிஸ்டிங் அதாவது பட்டியலிடப்படுகின்றன.

அனைத்து முதலீட்டாளர்களின் பெரிய எதிர்பார்ப்பை லிஸ்டிங் தூண்டியுள்ளது.

click me!