gram suraksha scheme : மாசத்துக்கு ரூ.1400, கிடைப்பதோ ரூ.35 லட்சம்: அஞ்சலகத்தில் அருமையான திட்டம் தெரியுமா

First Published May 13, 2022, 1:42 PM IST

gram suraksha scheme in post office: இந்திய அஞ்சல் துறையில் உள்ள சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்று கிராம் சுரக்ஸா திட்டம். இந்த திட்டத்தில் குறைவான தொகையை முதலீடு செய்து, அதிகமான லாபத்தைப் பெற முடியும்.   இந்த திட்டம் குறித்துப் பார்க்கலாம்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1. இ்ந்த திட்டத்தில் 19வயது முடிந்தவர்கள் முதல் 55 வயதுள்ளவர்கள் சேர முடியும்

2.இந்த திட்டத்தில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு  செ்யய முடியும்

3. இந்தத் திட்டத்துக்கு ப்ரீமியம் தொகை மாத ப்ரீமியம், காலாண்டு ப்ரீமியம், , ஆண்டு ப்ரீமியமாகச் செலுத்தலாம்

ப்ரீமியம்கள் மற்றும் லாபங்கள்

1. 19வயதுள்ள ஒரு முதலீட்டாளர் 55வயதுவரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய மாதம் ரூ.1515 ப்ரீமியம் செலுத்த வேண்டும்

2. 58வயது வரை மாதம் ரூ.1,463 டெபாசிட் செலுத்த வேண்டும், 60வயது வரை முதலீடு செய்ய விரும்பினால், மாதம் ரூ.1411 செலுத்தினால் போதுமானது.

3. 55வயதில் முதலீட்டாளருக்கு ரூ.31.60லட்சம் கிடைக்கும், 58 வயது நிறைவடையும்போது ரூ.33.40 லட்சம் ரிட்டன் கிடைக்கும், 60வயது நிறைவில் ரூ.34.60 லட்சம் கிடைக்கும்.

4 ஆண்டுக்குப்பின் கடன் வசதி

அஞ்சலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிராம் சுரக்ஸா திட்டத்தில் ஒரு முதலீடு செய்தால், 4 ஆண்டுகள் ப்ரீமியம் தொகை செலுத்தியபின், 5-வது ஆண்டில் அந்த முதலீட்டாளர்கள் கடன் வசதி பெற முடியும். 

மற்ற விவரங்கள்

1. ஒரு முதலீட்டாளர் ப்ரீமியம் தொகையை மாதம், காலாண்டு, மற்றும் ஆண்டுப் பீரியமாகச் செலுத்தலாம்

2. ஏதாவது அவசரநேரத்தில் 30 நாட்கள் கருணைக் காலம் வழங்கப்படும்
முதலீடு செய்த நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குப்பின்புதான் பாலிசியை ஒப்படைக்க முடியும் அதற்கு முன்பாக ஒப்படைக்க முடியாது

3. 5 ஆண்டுகளுக்கு முன்பை பாலிசியை திரும்ப ஒப்படைத்தால், போனஸ் தொகை பெற தகுதியில்லை. 

click me!