Petrol - Diesel Price Today : மீண்டும் உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி !

Published : Apr 06, 2022, 08:05 AM IST

Petrol - Diesel Price Today : சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.  

PREV
15
Petrol - Diesel Price Today : மீண்டும் உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி !

ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிந்ததும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 110ஐ தாண்டிவிட்டது. உக்ரைன் ரஷ்யா போரும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

25
petrol price hike

கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது. அதற்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலையும் நாடு முழுக்க குறைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் முடிந்து முடிவுகள் வரும்வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

35

பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

45

அந்த வகையில்,மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த 16 நாட்களில் 14-வது முறையாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

55
petrol

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கும் அதேபோல  76 காசுகள் உயர்ந்து ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories