home loan calculator: வீ்ட்டுக்கடன் இஎம்ஐ செலுத்திலிருந்து விடுபடுவது எப்படி? எளிதான வழிகள்

Published : May 21, 2022, 03:03 PM ISTUpdated : May 21, 2022, 03:04 PM IST

home loan calculator: home loan:வீட்டுக்கடன் வாங்கியிருப்போருக்கு மாத ஊதியத்தில் பெரும்பகுதி மாதத் தவணை செலுத்துவதிலேயே சென்றுவிடும். சேமிப்பு என்பது சிக்கலாகும். இந்த இஎம்ஐ பிரச்சினையிலிருந்து விரைவாக விடுபடுவது குறித்து இந்த செய்தி அலசுகிறது

PREV
110
home loan calculator: வீ்ட்டுக்கடன் இஎம்ஐ செலுத்திலிருந்து விடுபடுவது எப்படி? எளிதான வழிகள்
கனவு இல்லம்

ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு கட்டுவது என்பது கனவாக இருக்கிறது. அவரரின் வருமானத்துக்கு ஏற்ப, இருக்கும் சொத்துக்களுக்கு ஏற்ப சொந்த வீடு கட்டும் அளவு மாறுகிறது. 

210
வங்கிக் கடன்

பெரும்பாலும் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டுகிறார்கள். அல்லது ஏற்கெனவேகட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அடுக்குமாடியில் ஒருபிளாட்டையோ விலைக்கு  வாங்குகிறார்கள். அவ்வாறு வங்கியில் கடன் பெற்று வீடு வாங்கும்போது, மாதத்தவணை செலுத்துவது கட்டாயமாகிறது.

310
மாதக் கடைசி

 மாத ஊதியத்தின் பெரும்பகுதி இஎம்ஐ செலுத்தப்படும்போது, மாதத்தின் கடைசி நாட்கள், ஏதேனும் அவசரச் செலவுகள் வந்தால் சிக்கலாகிவிடுகிறது. அந்த நேரத்தில் வேறுஒருவரிடம் கடன் பெற்று செலவிடுவது அல்லது ஏதேனும் நகையை அடகு வைப்பது என்பதுதவிர்க்க முடியாததாகிறது. வீட்டுக்கடன் முடியும்வரை இந்த இஎம்ஐ என்பது நிகழ்போன்று தொடர்ந்து இதிலருந்து எளிதாக தப்பிக்கலாம்.

410
இஎம்ஐ செலுத்தும் தொகை அதிகப்படுத்துதல்

வங்கிக்கடன் தொகைக்கான இஎம்ஐ செலுத்தும் தொகையை அதிகப்படுத்துவதால், விரைவில் இஎம்ஐ செலுத்தி முடிக்க முடியும். அதாவது குறைவான இஎம்ஐ, நீண்ட ஆண்டுகள் என்று இல்லாமல், அதிகமான இஎம்ஐ குறைவான ஆண்டுகள் என்று திட்டமிட வேண்டும். பொதுவாக வீட்டுக்கடன் என்பது குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாகும். இந்த ஆண்டு காலத்தில் நீங்கள் பெரும் வருமானம் உயரும்போது, அந்த உபரித்தொகையை இஎம்ஐ செலுத்தும்போது, விரைவாக கடனை அடைக்க முடியும். 

510
முன்கூட்டியே செலுத்துதல்

மாத ஊதியம் பெறும் ஒருவர் வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ மாதந்தோறும் செலுத்தி வருகிறார். திடீரென அவருக்கு ஊதிய உயர்வு, போனஸ், வேறு ஏதாவது ஒரு வழியில் வருமான உயர்வு கிடைக்கும்பட்சத்தில் அதை கடனைதிருப்திச் செலுத்த பயன்படுத்தலாம். 

610
சுமை குறையும்

கூடுதலாகக் கிடைக்கும் பணத்தை கடனை திருப்பிச் செலுத்தும்போது, கடன் தொகை குறையும். குறைந்த கடன் தொகைக்கு வழக்கமான இஎம்ஐ அளவு செலுத்தும்போது, கடன் செலுத்துவது விரைவாகக் குறையும், வட்டியும் குறைந்துவரும். நாளடைவில் பணம் சேமிப்பது தெரியவரும். 

710
அதிகதொகை இஎம்ஐ வழி

வீட்டுக்கடனை அடைக்க சிறந்தவழி, இஎம்ஐக்கான தொகையை அதிகப்படுத்தி செலுத்துவதுதான். அவ்வாறு செலுத்தும்போது கடனையும் விரைவாக அடைக்க முடியும். இஎம்ஐ செலுத்தும் காலமும் குறையும்.

810
குறித்த நேரத்தில் செலுத்துதல்

வீட்டுக்கடன் பெற்று இஎம்ஐ செலுத்தும்போது, வேறுஏதாவது ஒருவழியில் கூடுதலாகப் பணம் கிடைத்தால் கடன் செலுத்தும் காலத்துக்கு முன்பே கடன் தொகையைச் செலுத்துவதாகும். இதன் மூலம் கடனுக்கு வட்டி செலுத்தும் தொகை சேமிக்கப்படும். 

910
நிதி மேலாண்மை

வீட்டுக்கடன் பெற்று சரியான நேரத்தில் இஎம்ஐ செலுத்துதல், கூடுதல் பணத்தை கடன் செலுத்த பயன்படுத்துதல், இஎம்ஐ செலுத்தும் தொகையை அதிகப்படுத்துதல் போன்ற நிதி மேலாண்மை, ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை கடைபிடிப்பதன் மூலம்,  விரைவாக கடனை அடைக்க முடியும். 
 

1010
வீ்ட்டுக்கடன் இஎம்ஐ என்னென்ன அம்சங்கள் இருக்கும்

கடனுக்கான தொகை
வட்டி வீதம்
கடன் செலுத்தும் காலம் 
 3 பிரிவுகளையும் வைத்து இஎம்ஐ முடிவு செய்யப்படுகிறது. ஆதலால் வீட்டுக்கடன் பெற்றிருந்தாலும் கூடுதல் இஎம்ஐ மூலம் விரைந்து கடனைச் செலுத்தும்போது, ஏராளமான பணம் சேமிக்கப்படும்.

 

click me!

Recommended Stories